அமேசான்

தென் அமேரிக்காவில் இருக்கும் அமேசான் காடுகள் மிக அடர்ந்த மழைக்காடுகள். 2008ம் வருடம் உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான பட்டியலில், அமேசான் காடுகள் இடம் பெற்றன. அமேசோனியா என்றும் அமேசான் மழைக்காடுகள் என்றும் அழைக்கப்படும் இவை நூற்று நாற்பது கோடி ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்துள்ளன. இப்பரப்பளவை பிரேடிலே, பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வதார், பொலிவியா, கயானா, கரிநேம், மற்றும் ஃப்ரென்ச் குயானா என்ற ஒன்பது தென் அமெக்கா நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.
இக்காட்டில் பல்லாயிரக் கணக்கான மரங்கள், தாவர வகைகள் காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பறவை வகைகள், மீன் வகைகள், பல நூறு வகை மிருகங்கள் இங்கு வாழ்கின்றன. இருநூற்றைம்பது கோடி விதமான பூச்சி வகைககள் அமேசான் காடுகளில் சுற்றி வருகின்றன. இப்படி, பல கோடி உயிரினங்களுக்கு அமேசான் காடுகள் அடைக்கலம் கொடுத்துள்ளது. வேறெங்கும் கான முடியாத விதம் விதமான உயிர் வகைகள் இங்கு இருப்பதால், உயிரினங்கள் பற்றிய எந்த ஆராய்ச்சியும் இக்காடுகளைக் கவனிக்காமல் முழுமை பெற முடியாது.
அமேசான் என்ற பெயர் வரக் காரணம் என்ன? இங்குள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நீரோடைகளில் வரும் படகுகளைக் கவிழ்க்க வல்லவை. எனவே இங்கு வாழ்ந்த காட்டு மக்கள் அவ்வகை மரங்களை அமேசான் என்று அழைக்கலாயினர், அமேசான் என்றால், இங்குள்ள மக்கள் மொழியில் ‘படகுகளை அழிக்க வல்லவன்‘ என்று பொருள்.
அழகு இருக்கும் இடத்தில் ஆபாத்தும் பொதிந்து தானே இருக்கும்? ராட்சத அனகோண்டா பாம்புகள், முதலை வகையைச் சேர்ந்த கருநிற கேய்மன், மலைவாழ் சிங்கங்கள், வெகு வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை வகைகள் என்று இயற்கையின் ஆபத்தான உயிரினங்களும், சில வகை விஷத்தாவரங்களும் இங்கே காணப்படுகின்றன.
இங்குள்ள ஈல் மீன் மனிதனையே சாய்க்கக் கூடிய அளவு மின்சாரம் பாய்ச்சக் கூடியது. ரத்தக் காட்டேரி நகை வவ்வால்களும் காணப்படுகின்றன. இவை ராபீஸ் என்னும் மிகக் கொடிய நோயைப் பரப்ப வல்லவை. மஞ்சல் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் இங்கு வேகமாகப் பரவுகின்றன.இங்கு பாயும் அமேசானே ஆறு, அதிக நீர்க் கொள்ளவிலும், விரிந்த ஆற்றுப் படுகையிலும் உலகின் மிகப் பெரிய ஆறாக விளங்குகிறது.
உலகத்தில் மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது. இந்த நதி 6448 கிலோமீட்டர் நீளமுடையது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சிலரும், நைல் நதிதான் என்று சிலரும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்று சொல்வதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

மிகவும் கடைசியாக நடத்திய கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோ மீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோ மீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோ மீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது பாரா எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதிவழி, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோ மீட்டர் நீளம் வருகிறது.

ஆனால், அந்த நதி அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி அது, டோக்காட்டின்ஸ் பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, தோ-நோர்த் எனும் கனால் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ள வேண்டும். அமேசான், 6448 கிலோ மீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

ஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கின்ற நீரின் அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. அமேசான் நதியின் வழியாக சாதாரண நேரங்களில் ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது.

நைல் நதி உட்பட மற்ற எந்த நதியிலும் இந்தளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலத்தில் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. 15,000 கிளை நதிகள் உண்டு இதற்கு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
மனிதன் தான் வாழ்வதற்காக காடுகளை அழிக்க ஆரம்பித்த போது, அக்கொடுமையிலுருந்து அமேசான் காடுகளும் தப்பவில்லை. கடந்த ஐம்பது வருடங்களில் மவைக்காடுகளில் நேர்ந்த பொருளாதரச் சுரண்டல் காரனமாகப் பெருமளவு மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பய்யன. மண்ணரிப்பால், பூமியின் சுற்றுச்சூழலே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, இற்கையின் சீற்றத்துக்கு வழி செய்யப்பட்டு விட்டது. தவிர, மரத்தவளை போன்ற அரிய உயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்படும் ஆபத்துகள் உள்ளாகியிருக்கின்றன.
உலகின் மிகப்பரந்த மழைக் காடுகளைக் கொண்ட அமேசான் படுகை அரிய வகைப் பறவையினங்கள்,மீன் வகைகள் மற்றும் மிருக இணங்களுக்குக் குடியிருப்பாக இருந்து இயற்கைக்கு உதவுகிறது. இயற்கையின் பொக்கிசமாக விளங்கும் அமேசான் காடுகளை உரிய வகையில் பாதுகாத்து, மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டியது மனிதரின் கடமை.

Leave a Reply