அதிசயத்தின் அடையாளம்

குழந்தை பேறு இல்லையா? கருவுறுதல் பிரச்சினையா? இது வரை நீங்கள் பார்த்த வைத்திய முறைகள் எதுவுமே பலனளிக்கவில்லையா? கவலையே வேண்டாம்.

மிக எளிய முறையில் இதற்கு தீர்வு காண முடியும். மூங்கில் அரிசியை உணவாக்கி தினமும் உண்டு வந்தால் ஓரிரண்டு மாதங்களிலேயே குழந்தைப் பேறு உண்டாகும்
உலகத்திலேயே அதிவேகமாக வளரும் தாவரங்களில் மூங்கிலும் ஒன்று. நீண்ட காலம் வளரக்கூடிய, புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். மூங்கில் மரம் ஏறக்குறைய 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் மொத்த உயரமான 60 மீட்டரை, 59 நாட்களிலேயே மூங்கில்கள் அடைந்து விடுகின்றன. இந்தியாவில் 175 வகை மூங்கில்கள் வளர்கின்றன. இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. பெரும்பாலானவர்களால் கூரை வேய்ந்த வீடுகள் கட்டவும், வேலி – தடுப்புகள் அமைக்கவும், கைவினைப்பொருட்கள் செய்ய பயன்பட்டாலும், குறிஞ்சி நில மக்களுக்கு மிக முக்கிய உணவாக இருந்தது. மூங்கிலில் தயாரிக்கப்பட்ட இருக்கைகளில், எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தாலும் உடலில் வெப்பம் ஏறாது. வியர்வையோ, எரிச்சலோ ஏற்படாது.
காடும்-காடு சார்ந்த நிலப்பரப்பான குறிஞ்சி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இந்த மூங்கில் குருத்துக்களையும், மூங்கில் அரிசியையும் ஆரம்ப காலங்களில் அதன் சுவைக்காக உணவாக உட்கொண்டார்கள். நாளடைவில் அவர்களால் அதில் இருந்த சத்துக்களையும்- மருத்துவ குணங்களையும் உணர முடிந்தது. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கில் மரங்கள் அவ்வளவு எளிதில் பூப்பதில்லை. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். 40 ஆண்டுகள் கழித்து பூத்தாலும் அதில் அதிசயங்கள் நிரப்பி அரிசியாய் விளையும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. எளிய உணவாக இருந்தாலும் வலிமையைத் தரும் சத்துணவு. 100 கிராம் மூங்கிலரிசியில் 60.36 கிராம் கார்போஹைட்ரேட்டும், 265.6மிகி கலோரிகளும் குவிந்து கிடக்கும் என்றால் அது அதிசயம் தானே.
மூங்கில் மரம் மொத்தமுமே மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசி, மூங்கில் தளிர் ஆகியவற்றை முறையே உணவாக உட்கொண்டு வந்தால் எப்படிப்பட்ட கொடுமையான வியாதியாக இருந்தாலும் விலகி ஓடும். உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
மூங்கில் அரிசி- குருத்து உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு யானை பலம் கொடுத்து, இரும்பை போல வலுவாக்கி, வஜ்ஜிரம் போல் இறுக்கி, தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைக்கும். எவ்வளவு கட்டுமஸ்த்தான உடலமைப்பை பெற்றவர்கள் கூட சர்க்கரை நோய் பிடித்தால் உருக்குலைந்து போவார்கள். ஆனால் அப்படி சர்க்கரை வியாதியால் உருக்குலைந்தவர்கள் கூட இந்த மூங்கில் உணவுகளை உட்கொண்டு வந்தால் மீண்டும் பழைய உடலமைப்பை பெறுவார்கள் என்றால் இது அதிசய உணவா?? இல்லையா???
மேலும் மூங்கிலரிசி பாலுணர்ச்சியின் உந்துதலை சீர் செய்து, கருப்பை கோளாறுகளையும் முறையாக்கி கருவுற பேருதவியாக இருக்கிறது.
மூங்கில் தளிர்கள்
இதற்குள் இருக்கும் சத்துக்கள் கணக்கில் அடங்காதவை.

நார்ச்சத்துக்கள் நிரம்பியது . பிராணசக்தியை தன்னுள் அதிகம் கொண்டுள்ளதால் நீரிழிவு நோய், கான்சர், இதய நோய்களுடன் மலசிக்கலும் வராமல் தடுக்கும். பொட்டாசியம், ப்ரோடீன், ரைபோபிலேவின்(riboflavin), மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு தேவையான மிக முக்கிய சத்துக்கள் நிறைந்தது மூங்கில் துளிர்கள். பொட்டாசியம் பொதுவாக உடல் நலத்திற்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தாது பொருள். எலும்பு மண்டலத்திற்கு மக்னீசியமும், இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக தாமிரச்சத்தும் , நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு B6ம் என உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களை உள்ளடக்கியது. நரம்புத்தளர்ச்சியை சீர் செய்யும். தோலை நல்ல முறையில் பாதுகாக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, மூங்கில் தளிர்களை முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். மேலும் பிரசவ காலங்களில் வலி இல்லாத பிரசவம் உண்டாக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். கொழுப்புக் குறை உணவு இது. புண்களை ஆற்றும். அல்சருக்கு சிறந்த நிவாரணி. இந்த தளிர்கள் செரிமானத்திற்கும், வயிற்றுப்போக்கிற்கும் உடனடி தீர்வு கொடுக்கும். வாசனை பொருட்களிலும், அழகுசாதன பொருட்களிலும், தலைமுடி தைலங்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
இப்போது சொல்லுங்கள் அதிசயத்தின் அடையாளம் தானே இந்த மூங்கில்
Easwari Ragu

Leave a Reply