அடும்பு

அடும்பு
கடற்கரையை ஒட்டிய வறண்ட பகுதிகளில் நிலம் படற்ந்து மண்டிக் கிடக்கும் ஒரு தாவரம்,

மலர்கள் மணி போன்ற வடிவத்தில், பல வண்ணங்களில் காணப்படும். அதன் இலைகளை சங்க இலக்கியங்களில் குறிப்பிடும்போது
‘மானடியன்ன கவட்டிலை அடும்பு’ எனவும்,
சித்தர் இலக்கியங்களில்-
ஆட்டுக்கால் அடும்பு’ எனவும்,
விலங்கினங்களின் குளம்பு வடிவில் இலைகள் இருப்பதைக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக மானின் குளம்பும், ஆட்டுக் காலின் குளம்பும் பொருத்திக் கவட்டிலை அடும்பு எனகுறிக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.

சங்க இலக்கியங்களில் தாவரங்களை சரியாக அடையாளம் காணும் விதத்தில் பார்த்தவுடன் தெரிந்துக்கொள்ளும் வகையில் புறத்தோற்றத்தின் பண்புகளைக் குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. இதுதான் பிற்காலத்தில் ஆங்கில தாவரயில் பெயர் சூட்டுவதற்கு அடிப்படையாக இருந்துள்ளது என நாம் பெருமையுடன் உலகிற்கு எடுத்துக் கூறலாம்.

இந்த அடும்பு தாவரத்தைக் குறிப்பிடப் பயன்படுத்திய இருசொற் பெயரை ‘மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்’, ‘ஆட்டுக்கால் அடும்பு’ என்பது தான் தாவரவியல் பெயராக எடுத்துக் கொண்டு,
 Ipomoea pes-caprae – என வழங்கப்பட்டுள்ளது.

இதில் pes-caprae– என்பது விலங்கினங்களின் குளம்பு என பொருட்படக் கூறப்பட்டுள்ளது, இது பொதுவாக விளங்கினங்களின் குளம்பு என பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் குறிப்பாகக் குளம்பின் அளவை இலையின் அளவாகக் கருத்தில் கொள்ளும் போது மானின் குளம்பும், ஆட்டின் குளம்பும் மிகவும் பொருந்துவதால் தொல்காப்பியர் கூற்றான

dumpu
“இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்”. – 19 கிளவியாக்கம்.

என்ற பாடல் வரிக்கு ஏற்ப அமைந்துள்ள சங்கால இலக்கியப் பெயர்தான், நூறு சதவீதம் பொருந்துவதாக உள்ளது.
அடும்பின் அடைமொழி  சங்கால புலவர்களின் கூறிய பார்வைக்கு சரியான எடுத்துக்காட்டுதலுக்கு – எடுத்து காட்டாகவும், தாவர இருசொற் பெயரீட்டு (Binomial Namenclature) முறைக்கு உலகிற்கு முன்னோடியாக உள்ளது, என்பது கருத்தில் கொள்ள வோண்டிய ஒனறாகும்

Leave a Reply