அகும்பே

​ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

🐉🐉🐉🐉🐉🐍🐍🐍🐍

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். அதோடு அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது.

அகும்பேவின் அமைதிக்காகவும், இங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்தும் திரள் திரளாக வந்து செல்கின்றனர்.

அகும்பேவின் அருகாமை ரயில் நிலையமாக 54 கி.மீ தொலைவில் உள்ள உடுப்பி ரயில் நிலையம் அறியப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் உடுப்பி ஹோட்டல்களில் தங்கிக்கொள்வது சிறப்பானது.

அகும்பேவின் காடுகளில் அதிக அளவில் ராஜநாகங்கள் வசித்து வருவதால் இது ராஜநாகங்களின் தலைநகரம் என்று அறியப்படுகிறது.


அகும்பெவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி ஆகியவை அறியப்படுகின்றன.

அகும்பேவில் உள்ள ‘அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்’ தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

🎄

கூட்லு தீர்த்த அருவி..

126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும்.

அகும்பே காடுகளில் வைப்பர் பாம்பும் காணப்படுகிறது.
    🎄

ஓநேக் அபி அருவி….

அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓநேக் அபி அருவி சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்.

அகும்பே காடுகளில்  குரங்குகளும் காணப்படுகிறது. 

🐸

தங்க நிறத் தவளை…

கோல்டன் ஃபிராக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தங்க நிறத் தவளை அகும்பே காடுகளில் அதிக அளவில் காணப்படும்.
அகும்பே காடுகளில் அட்டைகள் அதிகம். எனவே கவனமாக இருங்கள்.

Leave a Reply