கோயில் – கசாப்புகடை

எந்த கடவுளும் ஒரு உயிருக்காக மற்றோர் உயிரைக் கேட்பதில்லை.! அப்படி கேட்டால் அது தெய்வமில்லை. ஆனால் ஏன் இந்த ஆறு அறிவு உடைய பேசும் மிருகங்கள், ஐந்து அறிவுடைய பேசா மிருகங்களை கொல்கின்றன? இந்த இடத்திற்கும் இறைச்சி கடைக்கும் என்ன வித்தியாசம்? இதை யாரவது ஆதரித்து பேசி இது சிறு தெய்வ வழிபாடு என்று சொன்னால் அவனை கொண்டு போய் பைத்தியகார ஆஸ்பத்திரியில் சேருங்கள். கடவுள் ஆடு கேட்குமாம், மாடு கேட்குமாம், கோழி கேட்குமாம், பன்றி கேட்குமாம் …

More

அந்தந்தக் கணத்தில் வாழுங்கள் -Zen Story

முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். …

More

நாள் முழுவதும் ஏசி – பிரச்சனைகள்

நாள் முழுவதும் ஏசியில் இருந்தால், நன்கு குளிர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதோ நாம் சந்திக்கும் பிரச்சனைகள் நுரையீரல் பாதிப்பு ஏசியில் இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு. ஏனெனில் திடீரென்று வெப்பநிலை மாறுவதால், அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். சரும பாதிப்பு அதிக நேரம் ஏசியில் இருந்தால், அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்திவிடும். சுவாசக் கோளாறு மற்றொரு பிரச்சனை என்றால், சுத்தமான …

More

பிராண முத்திரை : உயிர் முத்திரை

செய்முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல். நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம். பலன்: உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும். பலவீனமானோர் தேக வலுப பெறுவர். குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம். நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும் உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் …

More

ஆரோக்கியமான குழந்தைகள்

பெண்கள் தமது 40 வயதிற்கு பிற்பட்ட காலங்களில் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆரோக்கியமற்றவர்களாக இருப்பார்கள் என இதுவரை கூறப்பட்டுவந்தது. ஆனால் 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை விட 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மனநிலையில் திடகாத்திரம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என புதிய ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது. லண்டனிலுள்ள Birkbeck பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி என்பன இணைந்து நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதுகளில் பெண்கள் தம்மை …

More