வீடுதோறும் புற்று நோய்

வீடுதோறும் கட்டாய புற்று நோய்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படும் போது, அதில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் என பல்வேறு விலை உயர்ந்த கனிமங்களும் பிரித்தெடுக்கப்படும்.
அதிக வெப்பத்தில் தாமிர தாதுவை உருக்கும் போது வெள்ளை நிற ஜிப்சமும், கருப்பு நிற காப்பர் ஸ்லாக் ஆகியவை கழிவுகளாக வெளியேறும்.

ஒரு டன் தாமிர கம்பி உற்பத்திக்கு பல டன் கழிவுகள் வெளியேறும்.
அந்த கழிவு மண்ணான காப்பர் ஸ்லாக், கருப்பு மண் Copper Slag (Ferro Sand) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசுப் பணிகளில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

இந்த மண்ணில் இரும்பு(Iron), துத்தநாகம்(Zinc), சல்பர்(sulphur), யுரேனியம்(uranium) உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்கள் இருக்கின்றன என ஆய்வுகள் சொல்கின்றன.
இப்போது தூத்துக்குடி 2 ஆம் கேட் பகுதியில் ரயில்வே பிளாட்பார்ம் அமைக்கும் பணிக்கும் இந்த நச்சு மண் தான் கொட்டப்பட்டு வருகிறது.
இதில் செருப்பில்லாமல் குழந்தைகள் நடக்க, பெரியவர்கள் நடக்க ,ஆடு, மாடு அனைவரும் நடக்க, வீடு தேடி வருகிறது பேரழிவு கதிரியக்கம்.
செத்தாலும் ஸ்டெர்லைட் மண்ணால் கோரமாக சாகும் நிலை.
கதிரியக்க அபாயமுள்ள, சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்ற, கழிவு மேலாண்மையற்ற ஒரு ஆலைக்கு சாதகமாக திராவிட அரசுகள், நீதிமன்றங்கள், காவல்துறை என அனைத்து அரசு இயந்திரங்களும் சேவகம் செய்கின்றது.
தமிழக மக்களை பற்றி கவலைபடுபவர் யாரும் இல்லை!!
வீடுதோறும் புற்று நோய் உபயம். 
தாமிரபரணி நீரை உறிஞ்சி விட்டு விஷம் கக்கும் ஸ்டெர்லைட்.

Leave a Reply