தென்காசி மருத்துவமனை பூங்கா 

சரத்குமார் எம்.எல்.ஏ வாக இருந்தபோது  தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது சொந்த 15 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான பசுமைப் பூங்கா அமைத்து, அதை பராமரிப்பதற்காக கணவன் மனைவியான ஞானமுத்து- வசந்தகுமாரி ஆகிய இருவரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து மாத ஊதியம் கொடுத்து வந்தார். 
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதையும், பூங்கா பராமரிப்புக்கு நிதி கொடுப்பதையும் நிறுத்திவிட்டார். கடந்த பத்து மாதங்களாக இன்றளவிலும் எந்த தரப்பிலிருந்தும் அவர்கள் ஊதியம் பெறவில்லை. இரண்டு நாட்கள் தண்ணீரின்றி விட்டால் கூட,  பூங்கா முழுவதுமாக கருகி போய்விடும். எனினும் ஞானமுத்து- வசந்தகுமாரி இருவரும் யாருடைய உதவியுமின்றியும் பூங்காவை தங்களது சொந்த செலவில் பராமரித்து, அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். 
இதை ஏன் அரசாங்கமே ஏற்று பூங்காவை பாரமாரிக்கக் கூடாது?

Leave a Reply