மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி

மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி

என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.

கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன்.

மனோகர் பாரிக்கர் க்கான பட முடிவு

🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில் நாம் அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது

🔥மரணத்தை நான் நெருங்கும் ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.

இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.

அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை என்பதை நன்கு உணர்கிறேன்.

மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.

உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.

எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.

வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும் நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்

எனவே நண்பர்களே, உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள் உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.

பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்…. எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.
-மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா).

(தமிழாக்கம் :
திரு,ராணா மோகன பிரகாஷ்.
திருப்பூர்….

வாழ்வின் இறுதி காலத்தில் மிகப்பெரிய உண்மையை அற்புதமாக வெளிப்படுத்திய திரு.மனோகர் பாரிக்கர் அவர்களுக்கு புகழ் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறோம்!!

🌹🙏🏼😔

One comment

Leave a Reply to ஜட்ஜ்மென்ட் சிவா. Cancel reply