​ரத்தன் டாடா சொன்னது

ரத்தன் டாடா சொன்னது- இரும்பை வேறு எந்தப் பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால்தான் உண்டு. இதேதான் மனிதனுக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை. எந்த வெற்றியும் நிலையானது இல்லை; எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. முறுக்கிக் குத்தினால் அவன் கை தானாக கீழே இறங்கும் 🙂

Leave a Reply