​பழகுவதில் 4 விதமான மனிதர்கள்

​பழகுவதில் 4 விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.
1.எதிர்பார்த்தது எதுவோ அதற்காகவே பழகுவார்கள். கிடைத்ததும் சென்றுவிடுபவர்கள். மீண்டும் தேவைப்படும்போது வருவார்கள். 100 சத சுயநல வாதிகள்.
2.பலனை அடைவதற்காக சில நன்மையைச் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் கொடுப்பதற்க்கும் வாங்குவதற்க்கும் சரியாக இருக்கும். 
அவரின் காரியத்தை நிரைவேற்ற நமக்கும் சில காரியம் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் தாராளமாக பழகலாம். ஆனால் இவர்கள் அனைவரிடமும் இப்படி பழக மாட்டார்கள்.
3.பலனை எதிர்பார்க்கவே மாட்டார்கள். அவர்களாகவே அனைத்தையும் செய்வார்கள். “எதற்க்காக செய்கிறீர்கள்?” என்றால் “நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?” என்பார்கள். அவர்கள் அன்பால் உங்களை தினறடிப்பார்கள். 
இப்படிப்பட்டவர்களால்தான் நம் சமுதாயம் செழிக்கிறது. இப்படிப்பட்டவர்களை உறவினராக நண்பனாக வைத்திருக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்.
4.யாருடனும் பழக்கம் அதிகம் இருக்காது. ஆனால் அன்பு மிகுதியாக இருக்கும். அறிவும் அப்படியே. அல்லது அன்பு செலுத்த தெரியாது. இவர்களிடம் நாம் கேட்டால் பலன் அடையலாம். 
உதாகரணமாக தாத்தா பாட்டிகளை சொல்லலாம். இவர்களிடம் பழகுவதற்க்கு தவம் செய்திருக்க வேண்டும்.
 1வதாக இருப்பவர்களால் தான் அதிகம் ஏமாற்றம் வருகிறது.இப்படி போலித்தன்மை வாய்ந்த மனிதர்களிடம் உங்களை எச்சரிக்கையாக இருந்து காத்துக்கொள்ளுங்கள்.
அவர்களை ஆராய்ந்து இனம் கண்டுகொள்ளுங்கள்.
மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கலாம்.ஆனால் ஏமாற்றம் என்றுமே ஆரோக்கியமற்றது.
மனிதனின் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
வீனாக நம்பிக்கை வைத்து ஏமாறாதீர்கள்!!
ஏமாற்றத்திலிருந்து மாற்றத்திற்க்கு வாருங்கள்!!!
செல்வி அருள்மொழி…..மனநல ஆலோசகர்.
படித்ததில் பிடித்தது.

Leave a Reply