​தாய் அன்பு – உண்மைக் கதை

​தாய் அன்பு – உண்மைக் கதை
 சீன பூகம்பத்தின்போது ஒர் தாய் செய்த தியாகத்தைக் கூறும் உண்மைக் கதை 
பூகம்பதின் ஆக்ரோசம் குறைந்ததும், ஓர் இளம் பெண்னின் வீட்டை அடைந்த மீட்புப் பணியாளர்கள் சிதைவுகளினுள்ளே அகப்பட்டுக் கிடந்த ஒர் உடலைக் கண்டனர். 
ஆனால் அந்த  உடல் கிடந்த முறை வித்தியாசமாயிருந்தது. சிரமங்களின் மத்தியில் அக் குழுவின் தலைவன் உடலை பரிசோதித்து உயிர் உள்ளதா எனப் பார்த்தார். 
ஆனால், அப் பெண் உயிரை ஏற்கெனவே விட்டுவிட்டிருந்தாள்.
மீட்புப் பணியாளர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு ஏனைய வீடுகளிலும் மீட்புப் பணியைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
 ஏதோ ஓர் ஊந்துதலினால் அக் குழுவின் தலைவன் அந்த வீட்டுக்கு மீண்டும் வந்தான். 
உயிரற்ற உடலை கீழே தெரிந்த இடவெளியை பரிசோதித்த அவன் ‘குழந்தை, இங்கே ஒரு குழந்தை’ என சத்தமிட்டான்.
முழு மீட்புப் பணியாளர்களும் ஒன்றாக இணைந்து சிதைவுகளை அகற்றினர். 
அந்த உயிரற்ற உடல் தடித்த துணியினால் சுற்றப்பட்ட மூன்று மாத குழந்தையை பாதுகாத்தவாறு இருந்தது.
 உண்மையில் அத் தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க ஓர் தியாகத்தை செய்திருந்தாள். 
வீடு உடையத் தொடங்கியதும், தன் உடலை கவசமாகப் பயன்படுத்தி குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறாள்.
குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர், அக்குழந்தையின் போர்வையில் ஓர் செல்லிடத்தொலைபேசியைக் காண்டார்கள். 
அதன் திரையில் ஓர் செய்தி இவ்வாறு இருந்தது. 
நீ உயிர் தப்பினால், ஒன்றை நினைத்துக் கொள். அதாவது நான் உன்னை அன்பு செய்கிறேன்

Leave a Reply