விவசாயத்தின் உண்மை நிலை

💰 கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ நூத்தி அறுவது ரூவா..
💰 நினைத்த போதெல்லாம் பறித்து உண்ட சப்போட்டா கிலோ எண்பது ரூவா..
💰 திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா..
💰 வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா..
💰 வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா..
💰 இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு பத்து ரூவா..
💰 கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..
💰 சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா..
💰 ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ 

நூத்தி இருவது ரூவா..
💰 தூக்கி எறிந்த சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா.. 
👉 என்ன பாக்கறீங்க…. உங்களுக்கு இப்போ விவசாயத்தின் உண்மை நிலை புரிந்து இருக்கும்.

👉 இது மட்டும் இல்ல… இந்த விலை பட்டியலில் வேப்பம்பூ , மாம்பூ , மாதுளை பூ , செம்பருத்திப்பூ , நந்தியாவட்டை பூ , மகிழம் பூ  மாதிரி மறந்து போன பல பூக்களின் விலையும் சேர உள்ளது.

👉 மேலும் விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, வில்வம், மாவிலை, நொச்சி, பவளமல்லி, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு.. 

👉 ஆமா…. இதெல்லாம் என்ன விளைவிக்க முடியாத அதிசயப் பொருளா? இவ்வளவு விலை போட்டு வாங்குவதற்கு…
👉 விளைபொருளே இவ்வளவு விலைக்கு விற்கும் பொழுது இதை விளைவித்த விவசாயி எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்.
👉 ஆனால் அவர்கள் இருக்கும் நிலைமை என்ன? அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விலைகள் மட்டும் உச்சத்தில் உள்ளன. ஆனால் அதை விளைவித்த விவசாயி இருக்கும் இடம் தெரியாத இடத்தில் இருக்கிறான்.
👉 எப்படியோ இன்னும் சில வருடங்களில் விளைபொருட்கள் அனைத்தையும் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கும்.
👉 அப்பொழுது தான் விவசாயிகளின் நினைப்பு நமக்கு வரும். ஆனால் அப்பொழுது இவர் தான் விவசாயி என்று கூறுவதற்கு கூட விவசாயிகள் இருக்க மாட்டார்கள்.
👉 விவசாயத்தின் அழிவையும், விவசாயிகளின் நிலையையும் சற்று நினைத்து பாருங்கள். மேலே விலைபட்டியலில் சொல்லப்பட்ட பொருள்கள் எல்லாம் மந்திரப் பொருட்களோ, அதிசயப்பொருட்களோ அல்ல.
👉 சாதாரணமாக மண்ணில் விளையும் விளைபொருட்கள் தான். 

👉 ஒவ்வொருவருக்குள்ளும் விவசாயி இருக்கிறார். உங்களுக்குள் இருக்கும் விவசாயியை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வாருங்கள். 

யார் விதைத்தாலும் விதைகள் முளைக்கும்….


யார் நட்டாலும் செடிகள் வளரும்…
👉 உங்களால் முடிந்த வரை வீட்டிலேயே வீட்டு தேவைக்காக மரங்களை நட்டு வளருங்கள். வருங்கால நம் சந்ததியினருக்கு இந்த பழங்களாவது கிடைக்கும்.
👉 சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பது மட்டும் அல்ல நம் கடமை. அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு இந்த சுற்றுச்சு ழலை அமைத்து தருவதும் நம் கடமை தான்… கடமையை நிறைவேற்றுங்கள் !!

Leave a Reply