ராக்கி – தன்னம்பிக்கை

​தாயின் கருவிலிருக்கும்போது மருத்துவர்கள் அளித்த ஒரு தவறான மருந்து காரணமாக ஸ்டலோனுக்கு பிறக்கும் போதே உடலின் ஒரு பாகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் படிக்கும் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோணலான முகம் சக மாணவர்களின் கேலிப் பொருளாக இருந்தது.

எனவே அவர் தன்னை கேலி, கிண்டல் செய்பவர்கள்
தன்னைப் பார்த்தால் பயப்படவேண்டும் என்பதற்காகவே பாடி பில்டிங்கில் ஈடுபட்டார். நாட்பட நாட்பட அவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை அரும்பியது.

1974 ஆண்டு வாக்கில் அவரிடம் இருந்தது : ஒரு கர்ப்பவதி மனைவி, ஸ்டலோன் வளர்த்த செல்ல நாய், ஏகப்பட்ட கடன், பிறகு நிராசையாக போன சினிமா கனவு. இவை தான் அப்போது அவரிடம் இருந்த சொத்து.

ஆனாலும் ஒரு நாள் நாம் சாதிப்போம் என்கிற கனவு அவரிடம் இருந்தது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? கடுமையான கடனில் மூழ்கியிருந்த அவர் சீக்கிரமே திவாலாகிவிட்டார்.

அமைதியற்ற நிலையில், ஏராளமான மன அழுத்தத்துடன் இருந்தார். ஆனால் அந்த நிலையிலும் ஒரு நாள் நம்மால் சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது.

ஆனால் நிலைமை இன்னும் மோசமாக, மனைவியின் நகைகளை விற்க நேர்ந்தது. வாடகை கட்டத் தவறியதால் குடியிருந்த வீட்டிலிருந்து ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். மனைவி, செல்ல நாய் மற்றும் அவர் – மூவரும் நியூ யார்க் பேருந்து நிலையத்திலே நாட்களை கழித்தனர்.

அப்போது கடுமையான குளிர்காலம். மனைவி குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார். ஸ்வட்டர் வாங்கக் கூட காசில்லை. வேறு வழியின்றி, தனது செல்ல நாயை ஒரு மதுபானக் கடை முன்னாள் நின்று அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரிடம் $25 க்கு விற்றுவிட்டார்.

இரண்டு வாரங்கள் கழித்து பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலிக்கும் சக் வெப்னருக்கும் இடையே நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அது ஏதோ ஒரு வித உத்வேகத்தை அவருக்கு அளித்தது. அடுத்த 20 மணிநேரம் அவர் அமைதியாக உட்கார்ந்து ‘ராக்கி’ எனப்படும் முன்மாதிரி திரைப்படத்திற்கான கதை வசனத்தை எழுதினார்.

எழுதி முடித்துவிட்டார் அடுத்து அதை படமாக்க தகுந்த நிறுவனத்தை தேடவேண்டுமே?

அவரே சொல்கிறார்… “கிட்டத்தட்ட 1500 முறை எனது ஸ்க்ரிப்ட் நிராகரிக்கப்பட்டது”. கடைசியில், ஒரு நிறுவனம் $125,000 அளிக்க முன்வந்தது.

வறுமை, வலிகள், கருவுற்றிருந்த மனைவி, கைவிட்டுப் போன செல்ல நாய் இத்தனைக்கும் இடையே அவருக்கு இருந்த ஒரே கனவு, தனது கதையில் தானே ஹீரோவாக நடிக்கவேண்டும் என்பதே.

அப்போதெல்லாம் ஹீரோக்கள் எல்லாம் பார்க்க மிக மிக வசீகரமாக இருப்பார்கள். நன்கு தங்கு தடையில்லாமல் பேசக்கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். ஆனால், முகத்தில் பக்கவாத பாதிப்பு தெரிந்த ஒரு பாடி பில்டர், அவரது திக்குவாய் உச்சரிப்பு இவை அனைத்தும் ஸ்டலோன் ஹீரோ மட்டுமல்ல வேறு எந்த பாத்திரத்துக்கும் லாயக்கற்றவர் என்று முடிவு செய்ய வைத்தது. கதையை ஏற்றுக்கொண்ட அந்த ஸ்டூடியோ இவரை ஏற்றுக்கொள்ள மறுத்தது. விளைவு? மற்றொரு தோல்வியுடன் வீடு திரும்பினார்!

ஸ்டலோன் எப்படியும் திரும்பி வருவார் என்று ஸ்டூடியோ நினைத்தது. ஆனால் அவர் வரவில்லை. ஸ்க்ரிப்ட்டுக்கு இரண்டு மடங்கு ($250,000) பணம் தருவதாகவும் ஆனால் நடிகராக வேறு ஒருவரை ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும் சொன்னது. ஆனால் ஸ்டலோன் மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் மேலும் ஒரு லட்சம் டாலர் சேர்த்து $350,000 தருவதாக சொன்னது.

ஆனால் இந்த நேரத்தில் எல்லாரும் அந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளும்படி அவருக்கு பிரஷர் கொடுத்தார்கள். “இதற்கு மேலும் பிடிவாதமாக இருப்பது பைத்தியக்காரத்தனம். முதலில் இந்தப் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். வேறு ஒரு கதை தயார் செய்து அதில் உங்கள் ஹீரோ கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்” என்று பலவாறு ஆலோசனை கூறினர். ஆனாலும் இவர் பிடிவாதமாக அந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

ஸ்டூடியோ இயக்குனர்களில் ஒருவருக்கு இவரது கதை மிகவும் பிடித்துப் போயிருந்தது. FORTUNE FAVORS THE BRAVE என்று சொல்வார்கள். கடைசியில் அவரது ஸ்க்ரிப்ட்டுக்கு $35,000 கொடுப்பதாகவும், அவரையே ஹீரோவாக போடுவதாகவும் சொன்னார்கள்.

அதற்கு பிறகு நடந்து தான் எல்லாருக்கும் தெரியுமே. சில்வஸ்டர் ஸ்டலோன் என்கிற பெயர் உலகின் மூலை முடுக்குகளில் கூட பிரபலமானது.

‘ராக்கி’ திரைப்படம் ஒரு மில்லியன் டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருநூறு மில்லியன் டாலர் வசூலித்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த படத் தொகுப்புக்கான ஆஸ்கார் விருதைக் கூட பெற்றது.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஸ்டலோன் அசைக்க முடியாத சக்தியாக, விளங்கினார். அவரை வைத்து தயாரிக்கப்பட்ட படங்கள் பல நூறு கோடிகளை அனாயசமாக உலகெங்கும் குவித்தது.

ஸ்டலோனுக்கு இங்கே உதவியது யார்? அவர் வணங்கிய கடவுளா? நிச்சயம் இல்லை. அவரது அசைக்கமுடியாத தன்னம்பிக்கை.

ஆம்… சில்வஸ்டர் ஸ்டலோனின் சரித்திரம் கூறுவது ஒன்றே ஒன்று தான்: உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். எந்த சூழ்நிலையிலும் அடிபணியாத முரட்டு நம்பிக்கையை வையுங்கள். அந்த நம்பிக்கையே நிச்சயம் ஒரு நாள் உங்களை கரைசேர்த்துவிடும்.

கடவுளையும் தன்னம்பிக்கையும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம். தன்னம்பிக்கையையே முதல் கடவுளாக கொள்ளவேண்டும். அவர்கள் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.

ஓ.கே. ஒரே ஒரு சந்தேகம்… அவரோட செல்ல நாயை அவர் விற்றது உங்களுக்கு உறுத்தலாய் இருக்குமே?

அவர் தனது முதல் ஸ்க்ரிப்ட்டுக்கு வாங்கிய $35,000 ஐ என்ன செய்தார் தெரியுமா?

அவர் எங்கே தனது நாயை விற்றாரோ அதே கடையின் முன், மூன்று நாட்கள் தொடர்ந்து நின்று, நாயை வாங்கிச் சென்ற அதே நபரை தேடிப் பிடித்து தனது செல்ல நாயை $15,000 கொடுத்து திரும்பவும் 

Leave a Reply