யார் விட்டுக் கொடுப்பது கணவனா? மனைவியா?

“விட்டு கொடுப்பது என்று பொதுவாக
சொல்கிறார்கள்….
யார் விட்டுக் கொடுப்பது கணவனா? மனைவியா?
பிரச்சனையே அங்குதானே ஆரம்பம்!’
எல்லோரும் ஆவலுடன் மகரிஷியின் முகத்தைப் பாக்கிறார்கள்…
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
கணவனுக்கு சாதகமாக பேசுவாரா? அல்லது
மனைவிக்கு சாதகமாக பேசுவாரா? மகரிஷி
சிரிக்கிறார். அப்புரம் சொல்கிறார்.
“யாரிடம் அன்பு அதிகாம இருக்கிறதோ,
அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக்
கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துப்
போவார்கள். அவர்கள் தான்
பொறுத்துப்போவார்கள்.”
“அன்புள்ளவர்களிடம் தான் பிடிவாதம் இருக்காது.
பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை
உற்பத்தி பண்ணுகிறவர்கள். அவர்கள் தாம்…
அவர்கள் தாம் power producers, charged Batteries,
நம்பிக்கை நட்சத்திரங்கள் இறை ஆற்றலோடு
நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம்
எளிதாக கை கூடும். அவர்கள் தொட்டதெல்லாம்
துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக
அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால்
ஆசிர்வதிக்க பெற்றவர்கள்!”
அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர்
உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறது.
விட்டுக் கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும்
என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு
பண்ணுகிறது.
அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப
அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும்
என்கிறார் மகரிஷி.

Leave a Reply