மொந்தம்பழம்

​#முடியாது-! #இல்லை…
இந்த இரண்டு சொற்களையும் சரியான நேரத்தில், சரியான நபரிடம் கூறவில்லையென்றால்  வாழ்நாள் முழுவதும் ‘நாம் பொதி சுமக்கும் கழுதைகளாக’ மற்றவர்களின் குற்றங்களுக்கும் சேர்ந்து தண்டனை பெறுவோம்!
நாம் செய்யத் தேவையில்லாத வேலைகள் நம் மீது ஏவப்படும்போது ‘முடியாது!’ என்றும்..
நமக்கு மட்டுமே உரிமையுள்ள ஒன்றை யாரோ ஒருவர் கேட்கும்போது இல்லை என்றும் சொல்லத்  தெரியவேண்டும்!

மலையாள எழுத்தாளர் ‘பஷீரின்’ கதை… “மொந்தம்பழம்”

இரவு பதினோரு மணி, நல்ல மழை,  கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டிருக்கிறது. காதல் மனைவி கண்களைக் கசக்கிக் கொண்டு செல்ல அழுகை அழுகிறாள்!
ஏன் செல்லம் அழுகிற? என்ன வேணும் ஒனக்கு…?”
எனக்கு மொந்தம் பழம் வேணும்.”
காலைல வாங்கித் தரேன்டா செல்லம்! வெளியில பயங்கரமா மழை பெய்யுது.”


” ஊஹூம் எனக்கு இப்பவே வேணும்… ஆசையா இருக்கு…”


“கடையெல்லாம் மூடிருப்பாங்கடா குட்டி..”

“ஒனக்கு எம்மேல கொஞ்சம்கூட ‘லவ்’ வே இல்லை! கலயாணத்துக்கு முன்னாடி எனக்காக உயிரையே தருவேன்னு சொன்னே.. இப்ப கேவலம் ஒரு மொந்தம்பழம் வாங்கித் தரமாட்டேங்கற… எங்கிட்ட பேசாத போ..”

என் செல்லம், என கண்ணு.. காலைல வாங்கித் தரேன்டா.. தூங்குடா பட்டு..”


“எங்கிட்ட பேசாத! எம்மேல ஒனக்கு துளிகூட பாசமேயில்ல..”


“சரி சரி.. அழுவாதடா தங்கம்.. வாங்கிட்டு வரேன்..”
முடியாதெனச் சொல்லத் துணிவற்ற முதுகெலும்பற்ற கணவன் கொட்டும் மழையில் வெளியே வந்தான்! 
எங்கெல்லாமோ சுற்றினான்! ஒரு கடை கூட திறந்திருக்கவில்லை. கடைசியில் சினிமா தியேட்டர் அருகே பூட்டின கடையில்  உள்ளே  லேசாக வெளிச்சம் தெரிந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் தட்டினான்’
யாரது!? இந்நேரத்துல ? ” இடிக்குரல் கேட்டது!


” ஐயா.. !ரொம்ப அவசரங்க.. ! தயவு செஞ்சு கொஞ்சம் கதவைத் தொறங்கய்யா..”


” அறிவுகெட்ட மூதேவி அர்த்தராத்திரில பொட்டிக்கடைல என்னடா அவசரம்?” என்று கேட்டுக் கொண்டே கடைக்காரர் ஒற்றைக்கதவைத் திறந்தார்!


” ஐய்யா! நாலு மொந்தம்பழம் குடுங்கய்யா ..” என்று காசை நீட்டினான்.

“அறிவில்லையா உனக்கு? இதுக்குத்தான் இந்நேரத்துல தூங்கறவனை எழுப்புனயா?

மொந்தம்பழம் இல்ல.. பூவம்பழம் தான் இருக்கு, வேணுமா? சொல்லு! ” எரிந்து விழுந்தார்!

“சரி குடுங்க.. ”  என்று சொல்லி நாலு பூவம்பழத்தை வாங்கி துண்டில் முடிந்து கொண்டு வீட்டை நோக்கி ஓட்டமாக ஓடினான்’.  ரோடெல்லாம் வெள்ளக்காடு. எதிரில் வந்த ஒருவன் எச்சரிக்கைக் குரல் கொடுத்தான்.
யோவ்.. ஏரிக்கரை ஒடஞ்சு ஊரெல்லாம் வெள்ளம்.. தண்ணீல நெறையா பாம்பு வருதாம்  பாத்துப்போ.,”
காதல் கணவனுக்கு உயிர்பயம் வந்தது! தன் விதியை எண்ணிக் கலங்கியபடி வந்தான்!  வீட்டினருகே இருந்த சிறு ஓடையில்  வரும்போது கணுக்காலளவு மட்டுமே தண்ணீர் இருந்தது.. இப்போது இரண்டு கரைகளையும் தொட்டு  வெள்ளமாக ஓடியது!
கடவுளே! இது என்ன சோதனை? பழம் வாங்கப் போய் உயிரைவிட்ட பரதேசிப்பயன்னு ஊரே பேசுமே..’ என்று மனம் புழுங்கினான்
இடுப்பிலிருந்து வேட்டியை அவிழ்த்து அதனுள் பழத்தை வைத்து தலைமீது வைத்துக் கொண்டு ஓடையில் குதித்து நீந்தி வந்து வீட்டையடைந்தான்.  உள்ளே போய் இந்தா கண்ணு என பழத்தை நீட்டினான்.
பழத்தைக் கையில் வாங்கிப் பார்த்த காதல் மனைவி  கோபமாகக் கேட்டாள்..

“உனக்கு ஒரு வேலைய ஒழுங்கா செய்யத் துப்பில்லயா? மொந்தம்பழம் வாங்கிட்டு வான்னு சொன்னா.. மொகரக் கட்டை ‘பூவம்பழம்’ வாங்கிட்டு வந்திருக்கே..?” என்று சொல்லி பழத்தைத் தூக்கி அவன் மூஞ்சிமேல எறிந்தாள்!

உயிரைப் பணயம் வைத்துப் போய் பழம் வாங்கி வந்ததன் பலனைப் பார்த்து கொதித்தான்
கழுதை முண்ட! உசுரைப்பணயம் வெச்சு நான் ஊடு திரும்பி வந்துருக்கன்? உனக்கு ‘மொந்தம்பழமேதான்!’ நொட்டனுமோ? ” என்று கர்ஜித்து ( வாழ்க்கையில  முதன்முறையாக) மனைவியை எட்டி உதைத்தான்!  இதை மரியாதையா தின்னு! இல்லேன்னா கழுத்து மேல மிதிச்சுக் கொன்னுடுவேன்..” – என்றான்.
மிரண்டுபோன பொண்டாட்டி தோலைக்கூட உரிக்காமல் கண்கள் பிதுங்க  ‘லபக் லபக்’ என பழத்தைத் தின்றாள்.
# ஒரு்நிமிடம் கணவன் யோசித்தான்

“நானல்லவா? கேடுகெட்ட முட்டாப்பய!

அகால வேளையில்.  அறிவில்லாத ராட்சசி  பழம் கேட்டு அடம் பிடித்த போதே இதைச் செய்திருந்தால்..? ‘இல்லை ! முடியாது’ என்று சொல்லியிருந்தால்? இவ்வளவு வேதனை இருந்திருக்காதே? என்று வாழ்க்கையில் ‘முதன் முதலாக சிந்தித்தான்!”

Leave a Reply