முறைப்படுத்தப்பட்ட பழக்கவழக்கம்−லேனா

​குளித்ததும், சோப்பை ஈரம் படாமல் வைப்பது; பூட்டியதும், சாவியை உரிய இடத்தில் வைப்பது; கணினியை முறையாக, ‘ஷட் டவுன்’ செய்த பின் எழுந்திருப்பது; பணம் என்றால், முன் பாக்கெட்; டோக்கன் என்றால், பின் பாக்கெட்; பெண்கள் என்றால், தீப்பெட்டி – லைட்டரை நிலையாக ஓரிடத்தில் வைப்பது; இரவு படுக்கையில் சரியும் முன், ‘கதவை தாழிட்டு விட்டோமா…’ என்று, உறுதி செய்வது; மொபைல் போன் கையாளல்; மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் என, ஒவ்வொரு விஷயத்திலும், ஒரு பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

‘சித்தம் போக்கு சிவன் போக்கு…’ என்று சொல்வரே, அப்படி இல்லாமல், எதிலும், ஒழுங்குமுறை வரட்டும். கொஞ்ச காலம் விடாமல் பின்பற்றி பாருங்கள். இப்படி செய்து வந்தால், சிறு மூளை விழித்து, நினைவூட்டும். அனிச்சை செயலாகவே, நாம் செய்யும் செயல்பாடுகளை பார்த்து, பலரும் வியக்க ஆரம்பித்து விடுவர்.

இது மட்டுமல்ல, ‘அடடா… என்ன, சிஸ்டமாட்டிக்…’ என்று, பாராட்டு பத்திரங்களும் வழங்குவர்!
லேனா தமிழ்வாணன்

Leave a Reply