பெரியார் ஒருவர்தான் பெரியார் !!!

பெரியார் ஒருவர்தான் பெரியார் !!!
சேலத்தில் பெரியார் பொதுக்கூட்டம் ஒன்றிக்கு வருவதை அறிந்த அவரது தொண்டர், கூட்டத்திற்கு வரும் வழியில், அவரது செருப்பு அறுந்து விட்டது..

சாலை ஓரத்தில் இருந்த செருப்பு தயார் செய்யும் தோழரிடம், அய்யா இந்த செருப்பை சரிசெய்து கொடுங்கள் என கேட்டார்.

இதுபோல மரியாதையான வார்த்தைகளை கேட்டறியாத அந்தத் தொழிலாளி, நிமிந்து பார்த்து, கறுப்புச் சட்டைப் பார்த்தவுடன், அய்யா நீங்கள் பெரியாரின் தொண்டரா? என்று கேட்டார்.

இவர் ஆமாம் என்று சொன்னவுடன், நான் பெரியார் அவர்களைப் பற்றி ஒரு கவிதை என் மனதில் உள்ளது. எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இதை அய்யாவிடம் எப்படி சேர்ப்பது? என்றவுடன்

தொண்டர் ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்து, நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன் என்று, அவர் சொல்ல எழிதி முடித்தார்.

நீளமான, சிறப்பான அந்தக் கவிதையைக் கண்டு, வியந்துபோன பெரியார் தொண்டர், நீங்கள் என்னுடன் வாருங்கள், நீங்களே மேடையில் இதை வாசியுங்கள் என்று வேண்டினார்.

மேடையில் அவர் வாசிக்கும்போது, தொண்டர் பெரியாரிடம் நடந்த விவரங்களைக் கூறினார்… கவிதை முடிந்தவுடன், பெரியார் ஒலிபெருக்கி அருகில் சென்று, அய்யா உங்கள் பெயர் என்ன? என்றார். என் பெயர் சொக்கலிங்கம் என்று சொன்னவுடன், பெரியார், “புலவர் சொக்கலிங்கம் வாழ்க என்று மூன்று முறை வாழ்த்தினார். கூடியிருந்த பொது மக்களும் ஆரவாரத்துடன் வாழ்த்தினார்கள்..

அதன் பிறகு சேலத்தில் எங்கு தி.க. கூட்டம் போட்டாலும், புலவர் சொக்கலிங்கம் கவிதை வாசிப்பார் என்ற விளம்பரத்துடன், நிகழ்ச்சி நடப்பது வழக்கமாக இருந்தது.

இதைக்கண்ட மேல் சாதியினர், அரிப்பு தாங்காமல், புலவருக்கு வக்கீல் நோடீஸ் அனுப்பினார்கள். படிக்கத்தெரியாத புலவர், கடிதம் கொடுத்த தபால்காரரிடம் படித்துக்காட்டும்படி வேண்டினார்..

சாதிவெறி, மூடநம்பிக்கைக்கு பிறப்பிடமான அந்த தபால்க்காரன்,

படிக்காத நீ எப்படி புலவனானாய் என்று நீதிமன்றத்தில் போய்ச் சொல்லு என்று தனது வயிற்றெரிச்சலைக் கொட்டித்தீர்த்தான்.

அதிர்ந்து போன புலவர், சென்னைக்குச் சென்று அய்யாவை நேரில் சந்தித்தார்..

புலவரைக் கண்டவுடன் அய்யா அவர்கள் எழுந்து வணங்கி, புலவர் சொக்கலிங்கம் எப்படி இருக்கிறீர்கள் என்று அன்புடன் கேட்டார். மூன்றாண்டு ஆகிப்போன விஷயத்தை அய்யா நினைவில் வைத்துள்ளதை எண்ணி வியந்த புலவர், நலமாக இருக்கிறேன் அய்யா என்று அமர்ந்தார்.

அய்யாவிடம் நோட்டீசைக் காட்டியவுடன், அய்யா புலவரிடம், ஏதாவது வக்கீலிடம் போனீர்களா என்று கேட்டார்.

புலவர் யாரிடமும் போகவில்லை என்றார்.
போய்விடாதீர்கள்… போனால் உங்களிடம் உள்ள செருப்பு தைக்க பயன்படுத்தும் ஊசி, கத்தி வரை எல்லாம் பிடுங்கிக்கொண்டு, பணத்தையும் வாங்கிக்கொண்டு வழக்கைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்..

ஆகவே நான் சொல்வதைப்போல செய்யுங்கள்.. என்று ஒரு செய்தியை அவரது காதில் சொன்னார்.

இந்த செய்தியை நீதிமன்றத்தில் மட்டும் சொல்லுங்கள்… வேறு யாரிடமும் சொல்லாதீர்கள் என்று மீண்டும் வலியுர்த்தினார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் முழுவதும் அவாள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெரியார் தொண்டர்கள் 70 பேர் புலவருக்கு துணையாக வந்திருந்தார்கள்.

வக்கீல்: உன் பெயரென்ன?
……… புலவர் சொக்கலிங்கம்…
வக்கீல்: உன் படிப்பு என்ன?
…………. நான் படிக்கவில்லை….
வக்கீல்: படிக்காத நீ எப்படி புலவரானாய்?
……………. இது எனக்கு எங்கள் அய்யா கொடுத்த பட்டம்…
வக்கீல்: உங்கள் அய்யா என்ன பல்கலைக் கழகமா?
……….. எங்கள் அய்யா அதைவிட மேலானவர்…
வக்கீல்: நீ புலவன் என்று போட்டுக் கொண்டது தவறு.. நீ எந்தப்
பல்கலைக் கழகத்திலும் படிக்காதவன். குற்றத்தை ஒத்துக்
கொள்கிறாயா ?
……… நீங்கள் யாரையெல்லாம் புலவர் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்?
வக்கீல்: திருவள்ளுவர், கம்பர் இளங்கோவடிகள் போல பலர்…
…………… இவர்களை எல்லாம் புலவரென்று நீங்கள் ஏற்றுக்
கொண்டால் இவர்கள் எல்லாம் எந்தக் கால்லூரியில்
படித்துப் பட்டம் வாங்கினார்கள் என்று கேட்டவுடன்… நீதிபதி உள்பட எல்லோரும் கைத்தட்டினார்கள்…

வழக்கு தள்ளுபடியானது.
தொண்டர்கள் 70 பெரும் புலவரைத் தூக்கிக்கொண்டு..

“புலவர் சொக்கலிங்கம் வாழ்க” “புலவர் சொக்கலிங்கம் வாழ்க”

என்றபடி நீதிமன்றத்தையே அதிரவைத்தார்கள்…

இதைத்தான் கவியரசு கண்ணதாசன்…

” நீதிமன்ற நீதிக்கும், நீதி சொல்வார்..
நெறிகெட்டு வளைந்ததேல்லாம் நிமிர்த்தி வைப்பார்…
சாதியென்னும் நாகத்தை தாக்கிதாக்கி,
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு”

என்று குறுப்பிட்டிருப்பார்..

2 comments

  1. தோழர், மேலே நீங்கள் பதிவிட்டுள்ள புலவர் சொக்கலிங்கம் பற்றிய பதிவு அருமை. அந்த சம்பவம் பற்றிய பதிவை எந்த புத்தகத்தில் படித்தீர்கள் என்று குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply