பிற உயிருக்கு உதவுதலாம

ஊரெங்கும் கசாப்பு கடைகள்

கூவி அழைக்காமலே 

கூட்டம் போகின்றதே
உயிர் வாழத்தான்

உணவே அன்றி

பிற உயிர் எடுத்து

உண்பதல்ல
உணவுக்கு வழி

உண்டே ஆயிரம்

பின் எதற்கு

பிற உயிரின் உடல்?
சுவைதான் முக்கியமென்றால்

பிணத்தின் சுவை கூடவா முக்கியம்?
சுடுகாட்டில் பிணம் புதைக்கலாம்

வயிற்றில் புதைக்கலாமா?
கோயிலுக்கு வரும்போது

அசைவத்தை தவிர்க்கும் மனம்

உடலே ஒரு கோவில் என்பதே

உணர மறுத்ததேனோ?
யாரோ கொன்றதை 

நீ ஏன் தின்று பலி ஏற்கிறாய்?

எண்ணத்தைச் சீரழிக்கும் புலாலை

இக்கணமே விலக்கிவிடு
பயத்தினால் வருவதல்ல

பக்தி

தவறை நீ எப்போது 

திருத்திக் கொள்வாய்?
நல் எண்ணம் உருவாக

நல்லதையே நாடிடு

தேடிப் போய் நன்மை செய்ய வேண்டியதில்லை

புலால் விலக்குதலே

பிற உயிருக்கு உதவுதலாம
via Vallal ashok.

https://www.facebook.com/groups/siddhar.science

Leave a Reply