பற்றற்றுஇரு

ஆசையே துன்பத்திற்கு காரணம் பற்றற்றுஇரு இவையெல்லாம் பெரியோர்களால் சொல்லபடுவது ஆசை இல்லாமல் எப்படி இருப்பது எப்படி வாழ்வது இது பலரின் கேள்வி இதற்கு பதிலாக இந்த விளக்கத்தை பார்ப்போம் 

குருவே பற்றற்று இருப்பது என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குங்கள் என்று சீடன் கேட்டாதற்கு குரு அவனிடம் நெய் நிறைத ஊற்றி செய்யப் பட்ட பொங்கலைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பின்னர் கையில் ஒட்டியிருந்த நெய் நன்றாகப் போகும் படி கழுவச் சொன்னார்.

சீடனும் நன்றாக சோப்புப் போட்டுக் கழுவி. நெய்யைப் போக்கினான்.
கையுள்ள நெய் போய் விட்டதா என்று குரு கேட்டதும் ஆமாம் குருவே நெய் அறவே போய் விட்டது என்று சீடன் பதிலுரைத்தான்.

சரி, இப்போது உன் நாவில் ஒட்டியுள்ள நெய்யையும் அதுபோல் நீர் விட்டும் சோப்புப் போட்டும் கழுவி சுத்தப் படுத்து என்று குரு சொன்னார்.

அதற்கு அவசியமே இல்லை குருவே, நாவில் நெய் ஒட்டவே இல்லை. பொங்கல் தின்ற ருசியோடு அது போய் விட்டது என்றான் சீடன்.

அதுதான் பற்றற்ற நிலை சீடனே. பொங்கலின் ருசி அறிந்த நாக்கு அதைச் சுவைப்பதோடு தன் கடமையை முடித்துக் கொண்டது. ஆனால் கை பொங்கலோடு நெய் கரையையும் தக்க வைத்துக் கொண்டது.

நாம் நம் நாவைப் போல் உலக விஷயங்களை அனுபவிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கையைப் போல் அதில் ஒன்றித் திளைத்து ஊறிவிடக் கூடாது என்று குரு விளக்கமளித்தார்.

இவ்வாறு தான் அன்பர்களே

இந்த சமுதாய த்தை விட்டு எங்கும் செல்ல முடியாது ஆனால் சமுதாய விசயங்களில் கலந்து விடாமல் தேவையை மட்டும் எடுத்து கொண்டு தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல் இருக்க வேண்டும்

Leave a Reply