பசித்திரு

*இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான்”*

*என்ற முடிவோடு “சாமியைப் பார்க்க விரைந்தான் முத்து*

*இந்த “சாமி” யார்….???*

*எந்த ஊர்….???*

*என்ன பேர்…..???*

*என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.*

*பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர்,*

*ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார்*

*ஊருக்குள் அவராக வரமாட்டார்*

*விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர்.*

*ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார்.*

*உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார்*

*எனவே, பெயரில்லாத அவரை “சாமி’ என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர்*

*”இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான்” என்ற முடிவோடு அந்த “சாமியை’ப் பார்க்க வந்தான் முத்து.*

*அவன் குடிசையில் நுழைந்தபோது,*

*சாமி ஆனந்தமாய் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார்.*

*அவருடைய மாற்று உடை ஒன்றைத்தவிர*

*குடிசையில் வேறு எந்தப்பொருளும் இல்லை*

*ஆள் நுழையும் சப்தம் கேட்டு,*

*”வா, முத்து வா” என்று அழைத்தார்*

*”சாமி, நேற்று நான் பட்டினம் போயிருந்தேன்.*

*அங்கே என் உறவினர் ஒருவர் இறக்கும் தருவாயில் பட்ட கஷ்டங்ளைப் பார்த்தேன்*

*அதிலிருந்து என் மனம் கலவரமடைந்திருக்கிறது.*

*நான் இறக்கும்போது அது போன்ற கஷ்டங்ளை அனுபவிக்க விரும்பவில்லை.*

*ஆனந்தமாக இறக்க வேண்டும்*

*அதற்கு வழி ஏதேனும் இருக்கிறதா…??? சொல்லுங்க சாமி,” என்றான்.*

*”அது மிகவும் எளிமையானது*

*ஆனால், சுலபமானதல்ல.”*

*”உன்னிடம் எத்தனை மேலாடைகள் உள்ளன”…???*

*”இருபதுக்கும் மேல் இருக்கும்.”*

*அதில் மிகப்பழைய,*

*விலை மிகக்குறைவான ஒன்றை எடுத்து இப்போது நான் செய்வது போல் செய்துவிட்டு நாளை வா என்றவர்,*

*தன் மேலாடையைக் கழற்றித் தூக்கியெறிந்தார்.*

*அதனை அவன் கண் எதிரே தீயிட்டுக் கொளுத்தினார்.*

*அதைப் பார்த்து சிரித்தார்.*

*இது என்ன பெரிய காரியம்” என்று நினைத்த முத்து*

*வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் இருந்த பத்து வருட பழைய சட்டை ஒன்றை எடுத்தான்.*

*அது பல இடங்களில் நைந்து கூட போயிருந்தது.*

*அதனை தூக்கி எறியலாம் என்று நினைத்தபோது,*

*அது அவன் பாட்டி அவனது பிறந்த நாளுக்குக் கொடுத்த பரிசு என்பது நினைவுக்கு வந்தது.*

*அதை வைத்து விட்டான்.*

*இவ்வாறாக ஒவ்வொரு ஆடையை எடுக்கும்போதும் ஒவ்வொரு ஞாபகம்*

*மறுநாள் சாமியின் கால்களில் விழுந்தான்.*

*”அய்யா…., ஒரு பழைய ஆடையைக்கூட என்னால் தூக்கி எறிய முடியவில்லை.*

*என்னை எவ்வாறேனும் காத்தருளுங்கள்.*

*இதற்காக என் குடும்பத்தைவிட்டு உங்களோடு வந்து விடவும் நான் சித்தமாயிருக்கிறேன்,” என்றான்.*

*”ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத உன்னால்,*

*நேரம் வரும்போது உடல் எனும் ஆடையை எவ்வாறு சுலபமாக கழற்றிவிட முடியும்”…???*

*”பசித்திரு,*

*தனித்திரு,*

*விழித்திரு”*

*இதுவே உனக்கான என் உபதேசம்.*

*பசித்திரு என்றால*்

*உன் ஆன்மிகப்பசியினை வளர்த்துக்கொள் என்று அர்த்தம்.*

*உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது.*

*அது தற்போது இயலாத காரியமும் கூட.*

*உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும்,*

*இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.*

*அதுவே தனித்திரு என்பதன் பொருள்.*

*ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத நிலையில் நான் உள்ளேன்.*

*இது போன்று இன்னும் எத்தனை எத்தனை கர்மவினையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறேனோ’ என்ற விழிப்புணர்வுடன் வாழ்.*

*இதுவே விழித்திரு என்பதன் பொருள்.*

*இந்த உபதேசத்தினை கடைபிடி. மற்றவை தானே நிகழும்,”*

*என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தார்.*

*அந்த சாமியார் தெரியுமா…???*

*வள்ளலார் என்ற பெருமகனார் தான்.*

???

படித்ததில் பிடித்த பகிர்வு

Leave a Reply