நேர்மை

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக்
கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை
வாசிக்க ஆரம்பித்தார்.

அரங்கத்தில் உற்சாக_ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு
வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.

வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க_
வெகுநேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,
கண்ணதாசன்சொன்னார்,

இன்று நான் வாசித்த கவிதை நான்
எழுதியது அல்ல.

உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று
ஒரு கவிதை எடுத்துக்கொண்டு வந்து
என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.

எனவே நான் எழுதிய_கவிதையை அவரை
வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய
கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது
எந்தவித ஆரவாரமும் இல்லை.

அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது
பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம்
பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப்_பற்றிக் கவலைப்படுவதில்லை.
என்பதுதான் உண்மை என்று புரிகிறது என்றார் கவிஞர்.

இது கவிதைக்கு மட்டுமல்ல,முகநூலிலும் பதிவின் தன்மையை அறிந்து விருப்ப குறியீடோ,பின்னூட்டமோ, பகிர்வோ செய்வதை விட,பதிவாளரின் அழகு,பதவி,பிரபல்யத்தை பொருத்துதான் அந்த பதிவின் தன்மையை அதிகமானோர் தீர்மானிக்கின்றனர்.

எந்த புரோஜனமும் இல்லாத ஒன்றுக்கே நாம் இப்படி ஆளுக்கு தகுந்தப்படி நடந்து கொண்டு,தினந்தோரும் மற்றவர்களை விமர்சனம் செய்வதில் மட்டும் வல்லவர்களாக உள்ளோம்.

முதலில் நாம் நம் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடக்கின்றோமா?அனைவரையும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சமமாகத்தான் மதிக்கின்றோமா? சமூகம் என்பது நாம் ஒவ்வொருவரும் சேர்ந்ததுதானே? நம்மை பார்த்துதானே நம் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.அவர்களுக்கு நாம் எல்லாம் நல்ல உதாரணமாக நடந்து கொள்கின்றோமா?

Leave a Reply