நீங்கள் எப்படி?

ன் தந்தை அருகில் அமர்ந்திருக்க, காரை இளம் பெண் ஒருவர் டிரைவ் செய்து கொண்டிருந்தாள். அந்நேரத்தில் மழையுடன் கூடிய பெரும்புயல் ஒன்று அவர்கள் சென்றுகொண்டிருந்த பாதையை தாக்கியது.

முன்னால் கார்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் எல்லாரும் மேற்கொண்டு செல்ல முடியாமல் அவரவர் வாகனங்களை ஓரங்கட்டினர்.

“அப்பா… நான் என்ன செய்யட்டும்?” பெண் பதட்டத்துடன் கேட்டாள்.

“நீ பாட்டுக்கு போய்கிட்டே இரு…” என்றார் தந்தை.

சில நூறு மீட்டர்கள் சென்றபிறகு, மிகப் பெரிய MULTI-AXLE டிரக் ஒன்று கூட புயலுக்கு பயந்து ஓரங்கட்டியது.

“அப்பா… நாமும் சற்று ஒரங்கட்டவேண்டும். எதிரே என்னால் சாலையை பார்க்க முடியவில்லை. எல்லோரும் ஒரங்கட்டிவிட்ட நிலையில், நாம் மட்டும் போகவேண்டுமா என்ன?”

நின்றால் மட்டும் என்ன? புயலிலிருந்து தப்பிவிடுவோமா என்ன? நீ பாட்டுக்கு போய்கொண்டே இரு” என்று தந்தை தைரியமூட்ட பெண், தொடர்ந்து டிரைவ் செய்தார்.

புயல் மேலும் வலுவடைந்தது. எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் தந்தை கொடுத்த தைரியத்தில் அந்த பெண் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள். சில மைல் தூரம் சென்றவுடன், பாதை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாக தெரிய ஆரம்பித்தது. சூரியனும் மெல்ல தெரிந்தான். புயலும் இல்லை. புயல் மையம்கொண்டிருந்த பகுதியை இவர்கள் கடந்துவந்துவிட்டனர்.

இப்போ வண்டியை ஓரங்கட்டிட்டு இறங்கு!” என்றார் தந்தை.

“ஆனா… அப்பா… இப்போ எதுக்கு?”

வெளியே இறங்கி திரும்பிப் பாரு. இனிமேலே முடியாதுன்னு வண்டியை நிறுத்தினவங்க எல்லாம் இன்னும் புயல்ல தான் மாட்டிகிட்டு இருக்காங்க. ஆனால், நீ விடாமுயற்சியுடன் வண்டியை நிறுத்தாமல் செலுத்தியமையால் புயலை தாண்டி வந்துவிட்டாய் பார்!”

ஆம் அவர் சொல்வது உண்மை தான். புயலுக்கு பயந்து வாகனத்தை நிறுத்தியவர்கள் புயலுக்குள்ளேயே இன்னமும் சிக்கொண்டிருந்தனர்.

கடினமான காலகட்டத்தில் சென்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் இது தான் பதில்.

மற்றவர்கள் அனைவரும், ஏன் மிகப் பெரும் சக்தி படைத்தவர்கள் கூட ‘இனிமே முடியாது’ என்று விட்டுவிட்டார்கள் என்பதற்காக நீங்கள் உங்கள் முயற்சியை விட்டுவிடவேண்டும் பயணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று அவசியம் இல்லை. “சிவ… சிவ… ராமா… கிருஷ்ணா”ன்னு அவன் பேரை சொல்லிக்கிட்டு நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருங்க. சீக்கிரம் புயல்கள் ஓய்ந்துபோகும். வசந்தம் பிறக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தற்காலிகமாக தான் தடுக்கமுடியுமே தவிர ஒருபோதும் நிறுத்தமுடியாது.

நீங்கள் எப்படி?

Leave a Reply