நா .முத்துக்குமார் கவிதை

​சோற்றுக்கு வரும் நாயிடம் 

யார் போய்ச்சொல்வது ? 

வீடு மாற்றுவதை !

என் அப்பா 

ஒரு மூட்டை புத்தகம் 

கிடைப்பதாக இருந்தால் 

என்னையும் விற்றுவிடுவார்!
“பிம்பங்களற்ற தனிமையில் 

ஒன்றிலொன்று முகம் பார்த்தன

சலூன் கண்ணாடிகள்..
“அம்மாவை எரித்த பின்னும் 

அவள் புடவை ஆவியாகிக்கொண்டிருக்கிறது

இட்லி தட்டுகளில்”…

“இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்

மண்ணெண்ணெய் விளக்குகள்

ஞாபங்கள் எரிகின்றன”..

“அடுக்குமாடிக் குடியிருப்பின்

மொட்டை மாடியில் 

நிலா இருக்கிறது” ..

சோறும் இருக்கிறது 

ஊட்டுவதற்குத் 

தாய் இல்லை “…
கடவுளிடம் பேசுகிறோம் 

என்கிற பயமே இல்லாமல்

குழந்தைகளிடம் பேசுகிறார்கள்

வளர்ந்த மனிதர்கள்”…
“காய்ந்த வறட்டியின்

உடம்பு முழுக்க 

அம்மாவின் விரல்கள்”..
“மாநகரத்து தட்டில் 

விழும் 

ஓவ்வோர் அரிசியிலும் 

ஓளிந்துருக்கின்றன

லாரிச்சக்கரத்தின் 

தடயங்கள்”..
“எத்தனை வயதென்று

எல்லோரும் பார்த்தனர்

பாடையில் சென்ற பிணத்திற்கு”..

 

“இறந்து போனதை 

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான் 
என்றாய்..
வீரனை இழந்த குதிரை 

பாரம்

சுமந்து செல்வது போல்

உன் வரிகளோடு 

என் வலிகள் …
– கவிஞர் நா .முத்துக்குமார்..

Leave a Reply