நாமே உலகம்

​படித்ததில்…

 இன்றைக்கு நமக்கு மிகத் தேவையாக இருப்பது….

#புத்தர் சொன்ன இந்த அறிவுரைதான் !

புத்தரை சந்தித்து அறநெறிகள் கற்றுக் கொள்வதற்காக அவரது மகன் ராகுலன் வந்திருந்தான்.அவன் புத்தர் இருந்த அறைக்குள் வந்தபோது, புத்தர் அங்கு ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீரில் அவனது கைகால்களை அமிழ்த்திச் சுத்தம் செய்துகொள்ளச் சொன்னார்.ராகுலன் அப்படியே செய்தான்.பிறகு,புத்தர் பாத்திரத்தில் உள்ள அந்தத் தண்ணீரைக் குடிக்கும்படி அவனிடம் சொன்னார்.

அசுத்தமான தண்ணீரை எப்படிக் குடிப்பது ?” என்று கேட்டான் ராகுலன். “தண்ணீர் சுத்தமாகத்தான் இருந்தது.அதை அசுத்தப்படுத்தியது நீதானே ? பிறகு,நீயே அதைக் குடிக்க மறுக்கிறாயே ?” என்று கேட்டார் புத்தர். இருந்தாலும்,அசுத்தமானதை எப்படிக் குடிப்பது என்று ராகுலன் மறுக்கவே,

“இப்படித்தான் உலகை நமது மனம்,மெய்,மொழி,செயல்களின் வழியாக ஒவ்வொரு நாளும் களங்கப்படுத்துகிறோம்.

பிறகு,நாமே உலகம் கெட்டுவிட்டது என்றும் கூச்சலிடுகிறோம். நம்மால் ஏற்படுத்தப்பட்ட சீர்கேட்டை நாம்தானே மறுசீரமைக்க வேண்டும் ?” என்றார் புத்தர்.

Leave a Reply