நமது கையில்… நம்பிக்கை

​ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:🤕🤕
சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை.

நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.😚
அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement.😩😩😩
அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.😭😭😭
அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.🤒🤒😷🤕
என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.🤧🤧
அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார்.✍
பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.✍✍✍
சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.🙌
60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன்.👍🏽👍🏽
என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார்.👍🏽👍🏽
அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்🤷🏼‍♂🤷🏼‍♂
இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார்.☺☺
படித்த கணவர் நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.☺
என்ன அற்புதமான மனதிற்கு வவிவூட்டும் வாக்கியங்கள்.☺☺☺☺
ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.☺☺

Leave a Reply