தன்னம்பிக்கை நிக் வோய்ச்சிச்

*தன்னம்பிக்கை_ என்றால் “நிக் வோய்ச்சிச்”*

* உலகின் மிகச் சிறந்த 10 பேச்சாளர்களில் “நிக் வோய்ச்சிச்-ம்” ஒருவர்.

* மிகச் சிறந்த எழுத்தாளர். “வாழ்க்கைக்கு எல்லை இல்லை” என்ற புத்தகம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

* “மூட்டுகள் இல்லாத வாழ்க்கை” என்கிற இலாப நோக்கமற்ற சமூக சேவை அமைப்பையும் நடத்தி வருகிறார்.

* பல விருதுகளை பெற்றுள்ளார்.

* ஐந்து கண்டங்களில் உள்ள 24 நாடுகளில் சுமார் மூன்று மில்லியனுக்கும் மேலான மக்களிடம் உரையாற்றி உள்ளார்.

* இவரின் சிறந்த பேச்சாக, கைககள் இல்லை, கால்கள் இல்லை, கவலை இல்லை என்ற தலைப்பில் பேசியது என்கின்றனர்.

* இத்தனை சாதனைகளை படைத்த இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, இரண்டு கால்களும் இல்லை.

* உடல் என்பது வெறும் ஊடகம் தான்.
நம் மனதின் சக்தியை வெளிப்படுத்த உதவும் ஊடகம். அது எப்படி இருந்தாலும் அது குறைகள் இல்லை.

* ஒருவேளை அதை யாராவது குறையாக நினைத்தால் அது அவர்களின் மனதின் குறையாக மட்டுமே இருக்க முடியும்.

* உங்கள் எண்ணங்களே உங்கள் வாழ்க்கையை முடிவு செய்கிறது. எண்ணங்களை சக்தி மிக்கதாக மாற்றுங்கள் போதும் உங்கள் வாழ்க்கை சக்தி மிக்கதாக மாறிவிடும்.

* உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.

உற்சாக வணக்கம்💐💐💐

Leave a Reply