டீ கோப்பை

சிந்தனைக்கு…

சுஸூகி ரோஷி என்ற ஜென் குருநாதரிடம் பல சீடர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர்.

அந்தச் சுஸூகியின் ஆசிரமத்தில் தேனீர் கோப்பைகள் அனைத்தும் மிகவும் மெல்லியவையாகவே இருந்தன.

அவற்றைக் கொஞ்சம் கவனமாகக் கையாளாவிட்டால் கீழே விழுந்து உடைந்து சிதறி விடும்.

இதைப் பார்த்த சீடன், குருநாதரிடம் சென்றான்.

“நீங்கள் ஏன் மோசமான டீ கோப்பைகளை வாங்கி வைத்திருக்கி றீர்கள்’ என்று கேட்டான்.

“”மோசமான டீ கோப்பைகளா, என்னப்பா சொல்கிறாய்?’

“ஆமாம். இங்கே வந்த ஒரு மாதத்தில் நான் ஏழு டீ கோப்பைகளை உடைத்து விட்டேன்.’ என்றான்.

அந்தச்சீடன். “கொஞ்சம் காசு செலவானாலும் பரவாயில்லை என்று நல்ல,கனமான கோப்பைகளாகப் பார்த்து வாங்கி வைக்கக்கூடாதா?’

அப்படி சிஷ்யன் சொன்னதும், சுஸூகி ரோஷி சிரித்தார்.

“கோப்பைகளை உடைத்தது நீ.

ஆனால் குற்றம் சொல்வது அவற்றின் மீது.

நல்ல நியாயம்மப்பா’ என்றார்.

“நான் பதினெட்டு ஆண்டுகளாக ஒரே டீ கோப்பையைத்தான் பயன்படுத்துகிறேன்’ என்றதும்
சீடன் அதிர்ந்து போய் நின்றான்.

குருநாதர் தொடர்ந்து சொன்னார். ” கோப்பைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பழகிக்கொள்ள வேண்டியது உன்னுடைய தேவை; வேலை.

அது உன்னால் முடியாவிட்டால் அதற்காகக் கோப்பைகளை மாற்றிவிடவேண்டும் என்று நினைக்காதே.

மனிதன்தான் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். அவனுக்கு ஏற்பச் சூழ்நிலை மாறும் என்று எதிர்பார்த்துக்காத்திருக்கக்கூடாது.’ என்றார்.

இந்தக் குட்டிக் கதை சொல்லும் நீதி:

சூழ்நிலையை நாம் மாற்ற முடியாது. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியும்..

என்பதுதான்…

Leave a Reply