ஜாதிக்கொரு நீதி

​*படித்ததில் வலித்தது*

கண்ணீரை வரவழைத்த உண்மை சம்பவம்….

சலுகைக்கு பெருமையுடன் ஜாதி பெயரைச் சொல்பவர்களால் , ஏன் திட்டும் பொழுது மட்டும் எங்களை கேவலப் படுத்தி விட்டார்கள் என்று கூற முடிகிறது…???
திருச்சிக்கு மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,.. அங்கு நல்ல உடையனிந்து ,நகையனிந்து காரில் கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம்,அவர்கள் அமர்ந்தார்கள்,,அவர்களுக்கு அருகில் வயதான தம்பதிகள் சாதாரன உடையில் காலில் செருப்பு கூட இல்லாமல் ,தாய் தந்தையை இழந்த தனது பேரனுடன் ,அமர்ந்திருந்தனர்..அலுவலக சிப்பந்தி ஒவ்வொருவராக அழைத்தார்,,பிரகாஷ்,,785.மார்க்,என்றார்,காரில் வந்தவர்கள் எழுந்து முதல்வர் அருகில் சென்றனர் .

அவர் கோப்புகளை பார்த்துவிட்டு நீங்கள் SC,,கோட்டாவில் வருகிறீர்கள் எனவே தங்கும் விடுதிக்கும் சேர்த்து -2500-ரூபாய் கட்டி சேர்ந்து விடுங்கள் என்றார்,கட்டிவிட்டார்கள்,.அவர்கள் கிளம்பும்போது முதல்வர் உங்களுக்கு- 14000-ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் வாங்கிக்கொள்ளுங்கள்,என்றார் அவர்கள் சரி என்று கூறி சென்று விட்டனர்.

அடுத்து பிரவீன்-960-மார்க் என்று அழைத்தார்கள்,அப்போது அந்த வயதான தம்பதிகள் தங்கள் பேரனுடன் முதல்வர் அருகில் சென்றனர்,அப்போது முதல்வர் பெரியவரே நீங்கள் BC,-எனவே விடுதிக்கும் சேர்த்து -98000-ரூபாய் கட்டிவிடுங்கள் என்று கூறினார்..உடன் அவர் தன் இடுப்பிலிருந்த பணத்தை எடுத்து,என்னிப்பார்க்க கூட முடியாமல் நடுங்கும் கைகளால் அலுவலக உதவியாளரிடம் கொடுக்க,அவர் அதை எண்ணிப்பார்த்துவிட்டு ஆயிரம் ரூபாய் குறைகிறது என்று சொல்ல ,பெரியவர் மனைவியை பார்க்க அந்த வயதான பெண்மனி தனது சுருக்கு பையிலிருந்து நடுங்கும் விரல்களால் சில்லரை நோட்டுகளை எண்ணிக் கொடுக்க .பையனை சேர்த்துவிட்டு அந்த தம்பதிகள் வெளியில் செல்லும்போது,அந்த பெரியவர் தன் மனைவியின் தோளை தொட்டு ,பாக்கியம் பஸ்ஸுக்கு பணமிருக்கா என்று கேட்டார்,.

இதை பார்த்தவுடன் ,ஆயிரம் சிறை கம்பிகளையும்,பிரச்சினைகளையும் பார்த்து கலங்காத கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

இதற்காகத்தான் ஜாதிக்கொரு நீதியா?
இனியொரு விதி செய்திட, பொருளாதார அடிப்படை வசதிகளை கருத்திற்கொண்டு ஜாதி வாரியான சலுகைகளை மாற்றியமைத்து உண்மையான ஏழைக்கு சலுகைகள் கிடைத்திட வேண்டி உடனே

please share
தகவல் Gowri Indirajith

Leave a Reply