சைவம் அசைவம்

சைவம் அசைவம்? என்ன வேறுபாடு
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..

தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை…
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை. தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.
மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்? 
தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்.. நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும். ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!
எங்கே தவறு நடந்தது? நாக்கு தான். வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!
இது உண்மைதானா என்று யோசித்திக் கொண்டே இருக்க, திருவள்ளுவரின் குறள்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

-Anand

Leave a Reply