செக்ஸ் படம்

படித்ததில் பிடித்தது !!!

இங்கிலீஷ் படம்….செக்ஸ் படம் போட்டிருக்கான்…போகலாமா..?”

“எந்த தியேட்டர்ல..?”
.
பல்லாவரம் பக்கத்தில் , ஏதோ ஒரு தியேட்டரின் பெயரைச் சொன்னான் என் கல்லூரி் வகுப்புத் தோழன்..!
கல்லூரியின் இளமைக் காலங்களில் “அந்த மாதிரி” கிளுகிளு படங்களை , நண்பர்களோடு சேர்ந்து பார்ப்பதில் ஒரு தனி கிக் இருக்கத்தான் செய்தது..!
.
அடுத்த செகண்டே எலெக்ட்ரிக் டிரெயினில் ஏறி …
அடுத்த ஒரு மணி நேரத்தில் தியேட்டர் வாசலில் ஆஜர் ஆனோம்.. .!
.
11.30 ஷோ…!
.
போஸ்டர் பார்த்தோம்…!
.
படத்தின் டைட்டில் :
“THE PREGNANCY AND CHILDBIRTH !”
.
மருத்துவ ரீதியிலான படம் !
ஆனால் தியேட்டர் வாசலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரிலேயே “அந்த மாதிரி” காட்சிகளைத்தான் ஏராளமாக அச்சிட்டிருந்தார்கள்…!
அதற்காகத்தானே அந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள்..!
கிட்டத்தட்ட ஹவுஸ்புல் …!
.
“எப்படா படம் போடுவான்..?” என்ற ஏக்கம் எல்லோர் கண்களிலும் ஏகத்துக்கும் இருந்தது..! ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக….!
.
“கிர்ர்ர்ர்” என மணி அடித்தது…!
போட்டுட்டாம்ப்பா …!
.
நியூஸ் ரீல்..விளம்பரம் எதுவும் இல்லாமல்
படம் ஓடத் துவங்கியது…!
ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே “அந்த மாதிரி” காட்சிகள் தொடங்க …. நாங்கள் குஷியாக ரசிக்கத் தொடங்கினோம்…!
.
PREGNANCY யை விளக்குவதாக சொல்லி கணவன்-மனைவி ரொமான்ஸ் காட்சிகளை நிறையவே காட்டினார்கள்…!
இங்கிலீஷ் படம் என்பதால் எல்லாம் தாராளமாகவே இருந்தது… கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருக்கும்போதே…….
இன்டர்வெல்…!
.
அடடா …அதுக்குள்ளேயா..?
“வாங்கப்பா , போய் சூடா ஒரு கப் டீ சாப்பிட்டுட்டு வரலாம்…”
.
கேண்டீன் போய் சூடான டீ குடித்துக் கொண்டே , இதுவரை ரசித்த சூடான காட்சிகளை சுவாரஸ்யத்தோடு அசை போட்டுக் கொண்டிருந்தபோது…..
“ஏய்ய்ய் …படம் போட்டுட்டாம்ப்பா ..”
.
அடித்துப் பிடித்து தியேட்டருக்குள் ஓடி வந்து ,மீண்டும் அவரவர் இருக்கையில் ஆவலோடு அமர்ந்தோம்..!
.
படம் ஓடிக் கொண்டிருந்தது ….!
இன்டர்வெல்லுக்கு முன்வரை PREGNANCY… இப்போது CHILDBIRTH…!

.
குழந்தை பிறப்பதை தத்ரூபமாக காட்டினார்கள்…
மருத்துவமனை… பிரசவ அறை…..அந்தக் கர்ப்பிணித் தாய் வலியால் கதறுகிறாள்….துடிக்கிறாள்…நெளிகிறாள்…
அவள் முகம் சிவக்கிறது……
ஆனால்…படம் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் முகம் வெளிறிக் கொண்டிருந்தது…!
.
குழந்தை பெறுவது இவ்வளவு கஷ்டமா..?
நம் தாய் இத்தனை வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டுதான் நம்மைப் பிரசவித்து எடுத்தாளா..?
.
நான் நண்பர்களை திரும்பிப் பார்த்தேன்….
எல்லோருமே கிட்டத்தட்ட என் மன நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது அந்த அரை இருட்டிலும் அவர்கள் முகங்களில் தெளிவாகத் தெரிந்தது…!
.
எனக்கு முன் சீட்டில் இருந்த ஒரு இளைஞன் அந்த பிரசவ காட்சியை காண திராணி இன்றி கைகளால் முகத்தை மூடி , முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறினான்…. “ஓ…காட்…!”
.
இப்போது அந்தத் திரை அரங்கத்துக்குள் இருந்த அத்தனை இளைஞர்களுக்கும் , திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த , அந்தப் பெண்ணின் அரை நிர்வாணமோ…அந்தரங்க உறுப்போ ..எந்தக் கிளுகிளுப்பையும் ஏற்படுத்தவில்லை..!
.
மாறாக அந்தத் தாயின் வலியும் , வேதனையும் , கத்தலும், கதறலும்..மரண ஓலமும்….
படம் ஓடிக் கொண்டிருந்த திரையை மறைத்தது , என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் திரை..!
.
“THE END”
.
# படம் முடிந்து வெளியே வந்தோம்…
.
எலெக்ட்ரிக் டிரெயினில் ஏறி ஹாஸ்டல் வந்து சேரும்வரை எவரும் எதுவும் பேசவில்லை..!
.
அடுத்து வந்த சில காலங்களுக்கு ரோட்டில் நடந்து போகும்போது , எதிரில் வரும் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தியேட்டரில் நான் கேட்ட அந்தக் கத்தலும் , கதறலும் என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது…!
.
அப்போது முதல்…பெண்களை நானும் என் நண்பர்களும் பார்க்கும் பார்வை , சற்றே மாற ஆரம்பித்தது…!
.
அவர்களைப் பார்க்கும்போதே பரிதாப உணர்ச்சிதான் முதலில் எங்களுக்குத் தோன்றியது…!
.
நாங்கள் பார்த்து ரசிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணும் , தங்கள் வாழ்வில் , அந்தப் பிரசவ வலியை , கத்தலை, கதறலை, அலறலை கட்டாயம் அனுபவித்துத்தான் ஒரு குழந்தையை ஈன்றெடுக்க வேண்டும் என்பதை உணந்தபோது…. கடவுளுக்கு ஈடான அந்தத் தாய்மையை கையெடுத்து தொழத் தோன்றியது…!
.
தாய்மையின் மதிப்பு ,
தானாக எங்கள் மனதுக்குள் உயர்ந்தது..!
.
ஆம் … அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை !

FB Copy

Leave a Reply