சாதிக்க நினைப்பவர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள்

சாதிக்க நினைப்பவர்களுக்கு
எழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள் ….!!!

1. புத்தகங்களைத் துணை கொள் ….அதை விட சிறந்த நண்பனில்லை ….

2. உடலுழைப்பை அதிகரி …. அது மட்டுமே உன்னை உயர்த்தும் , ஆனந்தமும் ஆரோக்கியமும் அதில் மட்டுமே கிடைக்கும் ..

3. குளிர்ந்த நீரில் குளி . உடல் சுறுசுறுப்பாகும் …

4. தியானம் கைக்கொள்…. உன்னை நீ உணர்ந்து கொள்ள அது மட்டுமே வழி காட்டும் ….

5. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட …. உன் தூக்கம் இன்பமாக இருக்கும் …

6. தாய் தந்தையைப் போற்றி வணங்கு ….. அது உன் கடமை.

7. உணவில் கீரை சேர்த்துக் கொள் ….

8. எத்தனை வலித்தாலும் அழாதே . சிரி . வலிமைக்குக் மேல் வலிமை பெற்று வானம் தொடுவாய் ….

9. ஆத்திரம் அகற்று .
எதற்கும் கோபப்படாதே ….
கோபம் உன்னை ஒரேயடியாக அழித்து விடும் ….

10. கேலிக்கு புன்னகையை பரிசாக்கு …

11. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு . திருப்பித் தாக்கி விடாதே ….

12. நட்புக்கு நட்பு செய் .
பகைவனைக் கூட நேசிக்கப் பழகு …..

13. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு ….
மேலும் மேலும் உயர்வாய் …

14. அலட்சியப்படுத்தினால் விலகி நில் . ஆத்திரப்பட்டுவிடாதே ….

15.. அன்பு செய்தால் நன்றி சொல் …. நன்றியுணர்வு உன்னைப் பெரியவனாக்கும் …

16. இதமாகப் பேசு .
இனிமைகள் உன்னை அரவணைத்துக் கொள்ளும் ….

17 . நீயும் நானும் எதைச் செய்தாலும் இறைவன் மௌனமாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் …..அவருக்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் …. ஆகவே நல்லதைச் செய் …..

நீ ஜெயிப்பாய்…. நிச்சயமாக ஜெயிப்பாய் ..

வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய்.

Leave a Reply