சாணக்கியரின் கூற்றின் படி இந்த 4 மனிதர்களுக்கு நீங்கள் உதவியே செய்யக் கூடாது?.

யார் அவர்கள்?…

சாணக்கியரின் கூற்றுப்படி நீங்கள் கீழ்கண்ட மனிதர்களுக்கு உதவியே செய்யக் கூடாது. பாவம்,புண்ணியம் பார்த்து செய்தால் அவை உங்கள் வாழ்க்கையில் பரிதாபத்தையே தரும் என்று சொல்கிறார்.
அவர்கள் யார் என பார்க்கலாமா?.
1- பிரச்சனை கொண்ட மனிதன் : 

சிலர் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். தீர ஆராய்ந்தால் அவர்களின் குணமே காரணமாகும். மோசமான குணம் கொண்டவர்கள் இப்படி பிரச்சனைகளை சிக்கிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவ முன் வந்தால் நீங்களும் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்பு உண்டு.

2- உண்மையில்லாத மனிதன் : 

சிலரிடம் உண்மையே இருக்காது. எப்போதும் போலித் தனமான வேஷம் கட்டிக் கொண்டு நல்லவர்களாக பேசுவார்கள். பொய் எப்போதும் பேசுவார்கள். அவர்களுக்கு உதவினால் உங்களை பிரச்சனையில் மாட்டி விடுவார்கள் என்பது 100 சதவீதம் உண்மை.

3- கவலை தோய்ந்தவர்கள் : 

எப்போதும் ஏதாவது பறி கொடுத்தவர் போல் தனிமையாகவும், கவலையாகவுமே சிலர் இருப்பார்கள். எப்போதும் எதிர் மறையாகவே பேசுவார்கள்.

இவர்களை சமாதனப்படுத்தினாலோ அல்லது உதவினாலோ அவர்களின் எதிர் மறை உங்களையும் தாக்கும் அபாயம் உண்டு.

4- முட்டாள்கள்

முட்டாள்களுக்கு உதவ நீங்கள் வரிந்து கொண்டு நீங்கள் போனால் நீங்களும் முட்டாளாகிப் போவீர்கள் .அவர்களுக்கு புரிந்து கொள்ளவும் இயலாது. அவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளையும் உண்டாக்கி விடுவார்கள். ஆகவே முட்டாள்களுக்கு உதவுவது ஆபத்தே.

அந்தரத்தில் தொங்காமல் இருக்க சாணக்கியரின் அறிவுரைகளை மனதில் கொள்வோம்.

ப்ரியமுடன் செல்வா.

Leave a Reply