கைத்தறி துணிகளின் தரம் தெரிந்து கொள்ள

கைத்தறி துணிகளின் தரம் மற்றும் மதிப்பீடு

வியாபாரிகள் ஒரு துணியை வாங்க போகும் பொழுது அந்த துணிகளின் தரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பாவு நூல் என்ன ஊடை நூல் என்ன அதன் எடை எவ்வளவு என்று கேட்டு அதன் தரத்தை தெரிந்து கொள்வார்கள்.

இன்னும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்..

அந்த துணியின் பாவு நூல் எந்த வகையான நூல் என்ன கவுன்ட், ஊடை நூல் என்ன நூல் என்ன கவுண்ட், ரீட், பிக் எவ்வளவு, அகலம், நீளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் அந்த துணிக்கு உபயோகப் படுத்திய நூலின் எடையை கண்டு பிடித்து விடலாம். அந்த நூலுக்கு உண்டான விலையையும் நெய்யும் கூலியையும் சேர்த்து கொண்டால் அந்த துணியின் அடக்க விலையை தெரிந்து கொள்ளலாம்.

1  1s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 1.65 மீட்டர் 2s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 2.30 மீட்டர் இதை வைத்து அனைத்து கவுண்டின் நூலின் எடையையும் கண்டு பிடித்து விடலாம்.

2  கவுண்ட் – நூலின் திக்னஸ்குண்டான அளவு எண் [ ஓவ்வொரு நூலுக்கும் ஒரு எண் இருக்கும். உதாரணம் 10s, 20s, 30s, 2/20s, 2/30s,

3  ரீட் :- பாவு நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை பிக் :- ஊடை நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை

பாவு நூல் :- தேவையான அகலத்திற்கு நூல்களை வைத்து 10, 15 சேலைகளோ, வேஷ்டிகளோ வரும் அளவிற்கு நீளமாக நூல்களை ஒரு உருளையில் இருக்கமாக சுற்றி வைப்பது பாவு எனப்படும்.

ஊடை நூல்:- பாவு நூலில் குறுக்காக பின்னப்படும் நூல் ஊடை நூல் எனப்படும்.
கம்பை:- பாவு நூல் 2000 இழைகள் என்றால் அந்த நூல் வரிசையில் ஒன்று விட்டு ஒன்றாக 1, 3, 5, 7, 9 என்று 1000 இழைகள் ஒரு கம்பையிலும். 2, 4, 6, 8, 10 என்று ஒன்று விட்டு ஒன்றாக அடுத்த கம்பையிலும் வரும். இந்த கம்பைகள் மேலும் கீழும் நகர்த்தப்படும் பொழுது பாவின் மொத்த இழைகளில் பாதி மேலும் பாதிநூல் கீழும் நகரும் இதன் இடையே குறுக்காக ஊடை நூல் செலுத்தி துணி உருவாக்கப் படுகிறது.

சாதாரண வேஷ்டி டிசைனுக்கு இரண்டு கம்பைகளில் மட்டுமே இழைகள் பிணைக்கப்படும். டிசைனுக்கு தகுந்தபடி இந்த கம்பைகள் 2 லிருந்து 10 வரை இருக்கும். அதிக பட்ச டிசைன்கள் 4 அல்லது 6 கம்பையில் முடிந்து விடும்.

அச்சு பினைப்பு:- அச்சு பினைப்பவர்களின் வேலை டிசைனுக்கு தகுந்தபடி எத்தனையாவது இழை எந்த கம்பையில் கோர்க்க வேண்டும் என்று எண்ணி, எண்ணி இழைகளை கோர்ப்பவர்களே அச்சு பினைப்பவர்கள்

நெசவு:- பாவு நூலில் ஊடை நூலை வித்தியாசமான முறைகளில் பின்னி டிசைன்களை உருவாக்குவதே நெய்தல்

நெய்தல் முறையானது 4000 வருடங்களுக்கு முன் தொடங்கப் பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

முதலில் கைகளினால் நூல் பின்னப்பட்டு துணி உருவாக்கப் பட்டது.

பின் நெய்வதை வேகபடுத்த மனித ஆற்றலினால் இயங்க கூடிய கைத்தறி கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ரேப்பியர் தறி வகைகளில் நான்கு விதம் இருக்கிறது. இதில் இரண்டு நாடாக்கள் ஒரே நேரத்தில் ஓடும் தறிகளும் உண்டு. இந்த தறி வகைகளில் ஓரம் இரண்டு பக்கமும் நூல் வெட்ட படுவதால் சாதா கரை வராது. வெட்டி தைக்கப்படும் துணி வகைகள் இதில் அதிகம் நெய்யப் படுகிறது.

புரொசக்டர், ஏர்ஜெட், வாட்டர் ஜெட் :- இது நாடா இல்லாத தறி வகைகள். சரோ வகை தறிகள் ஒரு நிமிடத்திற்கு 200 முறை நூல் ஊடையில் ஏற்றப்படும்.

Leave a Reply