கிராமத்தில் இன்னும்  

​நான் ஒரு கிராமத்து வீட்டிற்க்கு சென்றிருந்தேன்…அங்கு நான் கண்ட காட்சி என்னை வியக்க வைத்தது..
மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீடு முன் பக்கம் மாட்டு தொழுவம் ஓலையில் வேய்ந்த சிறிய சிட் அவுட்டுடன் கூடிய ஐந்து சென்ட் நிலம் கொண்டது..

இதில் வயதான அப்பா அம்மா இரண்டு

மகன்கள், அவர்களது மனைவிகள், அவர்களின் பிள்ளைகள் ஐந்து பேர்.. இன்னும் முடியவில்லை பத்து பசு மாடுகள், ஐந்து ஆடுகள் பத்து பதினைந்து கோழிகள் இரண்டு நாய்கள்

இத்தனையும் இரண்டு பெண்கள் பராமரிக்கிறார்கள்..

மகன்கள் இருவரும் விவசாயம் செய்கின்றனர்.. ஒற்றுமையாக சந்தோஷமாக ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள்..
அப்பார்ட்மெண்ட் லைபில் அப்பா அம்மாவையா சுமையாக நினைக்கும் படித்தவர்கள் கிராமத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்..

உறவுகளும் ஒற்றுமையும் நேர்மையும் கிராமத்தில் இன்னும்  அழியவில்லை.!!

Leave a Reply