காத்திருந்தால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் 

காத்திருந்தால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் 
கஷ்டங்கள் வந்து மனம் குழம்பும் போது நாமும் கடவுளை நினைக்கிறோம் அப்போது நம்முடைய மனமும் கடவுள் என்னுடைய கோரிக்கைக்கு செவி சாயப்பாரா ? அவர் என்மீது அன்பு காட்டுவாரா என்னுடைய பக்தியை அவர் ஏற்றுகொள்வாரா ?’என்றெல்லாம் எண்ணி கவலைப்படுகிறோம். ஒரு சந்தர்ப்பத்தில் இதோ குழப்பமான மனநிலை அனுமனுக்கும் வந்தது . பலவானும் ,பராக்கிரமசாளியும் , மிகுந்த தன்னம்பிக்கையும் கொண்ட ஆஞ்சநேயரே இலங்கையில் சீதையைத் தேடித் தேடி காணாமல் மனம் துவண்டு கிஷ்கிந்தை செல்வதைவிட அங்கேயே உயிரை விட்டு விடும் மனநிலைக்கு வந்து விடுகிறார் . பிறகு ஆலோசித்து ஒரு வேலை சீதாப்பிராட்டி உயிருடனிருந்து , அவர்களுக்கும் இதே மனநிலையில் இருந்தால், அதைத் தடுப்பதற்காகவாது நான் உயிருடன் இருந்தேயாக வேண்டும் என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொள்கிறார் .நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு தெய்வம் எப்படியாவது வழிகாட்டிவிடும் .சகல தெய்வங்களும் தன் கார்யம் கைகூட ஆசீர்வதிக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார் .அனுமனின் கண்களில் கடைசியில் அசோகவனம் தென்பட்டது.அன்னையைக் கண்டார். ஆனந்தம் கொண்டார் . ராமர் அனுப்பிய மோதிரத்தைப் பார்த்ததும் ,தேவிக்கு மகிழ்ச்சியும் ,மனநிறைவும் உண்டாகிறது . “என்னுடைய ஸ்வாமி எப்படிருக்கிறார் ? அவரை என்னால் திரும்ப அடைய முடியுமா ?” என்றெல்லாம் பலவாறு கேள்விகள் கேட்ட சீதையை அனுமன் சமாதானப்படுத்துகிறார் . காத்திருந்தால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் .சோதனைகள் அதிகமாக ஆக வேதனைகள் தீரும் காலம் நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.துன்பங்கள் அதிகமாகிக் கொண்டே போனால் இன்பங்களை அனுபவிக்கும் வேலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்

Leave a Reply