கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு நாள் இன்று

ஆகஸ்ட் 24: நாமக்கல் கவிஞர் எனப் போற்றப்படும் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு நாள் இன்று.
இவருடைய புகழ்பெற்ற வரிகள்:
    “கத்தி யின்றி ரத்த மின்றி 

            யுத்த மொன்று வருகுது

      சத்தி யத்தின் நித்தி யத்தை 

              நம்பும் யாரும் சேரூவீர்” 

      

                -என்ற  பாடலை ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் சென்ற போது தியாகிகள் வழிநடை பாடலாக பாடி சென்றனர். இந்த பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் பாடவும்பட்டது.
“இந்திய நாடிது என்னுடை நாடே 

      என்று தினந்தினம் நீயதைப் பாடு” 

              

                    – என்று நாட்டு பற்றையும் போற்றும் பாடலும் புகழ்பெற்றது. 

“தமிழன் என்று சொல்லடா 

     தலை நிமிர்ந்து நில்லடா”
     “தமிழன் என்றோர் இனமுன்டு 

      தனியே அவற்கொரு குணமுண்டு”
              இவ்வரிகள் தமிழனின் பெருமைகளை கூறுகின்றன.

 

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் 

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
       இவ்வரிகள் இளைஞர்களிடம் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. 
     இவரின் பாடல்கள் பலவற்றை தமிழக அரசானது  பள்ளி மற்றும் கல்லூரிகளில்  பாடத்திட்டத்திட்டமாக  சேர்த்து இவருக்கு  பெருமை சேர்த்து உள்ளது.  நாமக்கல் நகரின் பெருமைகளை உலகம் முழுவதும் அறிய நாமக்கல் கவிஞரின் பங்களிப்பும்  முக்கியமான ஒன்று. சிறந்த கவிதை மற்றும் புகழுக்கு சொந்தகாரரான நாமக்கல் கவிஞர் 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாள் மறைந்தார். ஆம் நாடு போற்றிய நாமக்கல் கவிஞரின்  44-வது  மறைந்த தினம் இன்று.
– லோ.பிரபுகுமார்

மாணவர் பத்திரிகையாளர்

Leave a Reply