கருகிய ரொட்டி

​முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்…
“நான் சிறுவனாக இருக்கும் போது …ஒரு நாள் இரவு நேரம் … வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்…
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்…
சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ….. ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்….
என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்…
ஆனால் அதற்கு என் தந்தையோ ..”எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் ” என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ….
சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்… நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :

” அப்பா … உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?”
சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்….

” மகனே…உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..

களைத்துப் போய் இருப்பார் … 
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை … 

ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்…
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல … ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்…

இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ….

நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ….” 
ஆம்..

“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை … 

ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்…
படித்ததில் பிடித்தது.

Leave a Reply