உனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே

*உனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே* !

“நாம் இதனை செய்தால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் , அசிங்கமாக நினைப்பார்களோ?” இந்த கேள்விதான் இன்று பலரை எதுவுமே செய்யவிடாமல் முடக்கி வைத்துள்ளது . அதனையும் மீறி அவர் செய்ய துவங்கிவிட்டார் என வைத்துக்கொண்டால் அதனை நிறுத்த வேறொன்றும் பெரிதாக செய்ய வேண்டியது இல்லை.

நீ செய்வது “சரியில்லை ” “கேவலமாக இருக்கின்றது ” இதுபோன்ற பதில்களை நான்குமுறை சொன்னால் போதும் , அந்த நபர் முயற்சியை கைவிட்டு பழைய நிலைக்கே திரும்பி விடுவார்.

நண்பர்களே! ஒன்றினை உணர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் எதனை செய்தாலும் அதனை பாராட்ட இரண்டு பேரும் , அதில் குறை கண்டறிந்து சொல்ல நான்கு பேரும் இருந்தே தீருவார்கள் . அது இக்காலத்திய இயற்கை .

உடனடியாக அனைவரின் குரலுக்கும் நம்மை மாற்றியமைத்து கொண்டிருந்தால் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது . நன்றாக இருக்கிறதென்று சொன்னால் “தலைக்கனத்தின் உச்சிக்கே சென்றுவிடாமல்” இருக்க பழகிட வேண்டும் . அதேபோல குற்றம் சொல்பவர்களின் வார்த்தைகளை கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும் . கேட்டுக்கொண்டு உடனடியாக நாம் செய்யும் செயலை முற்றிலுமாக நிறுத்திவிட கூடாது .

*குற்றம் சொல்பவர்கள் யார் ?*
நாம் செய்கிற விசயத்தில் அவர்கள்,

அனுபவம் உடையவர்களா?

நமது முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்களா?

எனஆராய்ந்து பார்க்க வேண்டும் . அவர்கள் சொன்னதில் அர்த்தம் இருப்பின் அதனை ஏற்று திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து உலகில் *அந்த நான்கு நபர்கள்* மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு உங்களின் முயற்சியை கைவிட்டு விடுதல் கூடாது .

தொடக்கத்தில் அனைத்துமே வெற்றிகரமானதாக அமைந்துவிடுவதில்லை. தொடர்ச்சியான முயற்சி தான் வெற்றிகளை அள்ளித்தரும் .

தொடக்கத்தில் உங்களது முயற்சியை கண்டு “சரியில்லை” என சொன்னவர்கள் , அவர்களை மீறி வெற்றியடையும் போது உங்கள் அருகிலே வந்து வெற்றியை கொண்டாடுவார்கள் .

ஆகவே உங்களின் திறமையை உங்களது தராசில் அளக்க பழகுங்கள் , அதனை விடுத்து

*அடுத்தவர் தராசில் வைத்து எடை போடாதீர்கள்*

Leave a Reply