உங்க மனைவியை மனதளவில் பாதிப்படைய செய்யும் 6 செயல்கள்

இந்த 6 செயல், உங்க மனைவியை மனதளவில் மிகுந்த பாதிப்படைய செய்யும்! ஆண்கள் கோபம், எரிச்சலை அதிகம் அவர்களது மனைவி மீது காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறர்கள். என்ன இருந்தாலும், இந்த இந்த 6செயல்கள் உங்கள் மனைவியை மனதளவில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் என மறந்திட வேண்டாம்.

By: Balaji Viswanath

ஆண்களுக்கு இருக்கும் ஒரு அபார நம்பிக்கையே நாம் என்ன செய்தாலும், இவள் நம்மை எதிர்த்து பேசமாட்டாள். இது ஆணாதிக்க உலகம் ஆயிற்றே, நாம் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இவள் சொல்லி நாம் என்ன கேட்பது. தாலி கட்டி, மூக்கணாங்கயிறு கட்டி இழுத்து செல்வது நாம் அல்லவா போன்ற எண்ணங்கள் பல இன்றும் பல ஆண்கள் மனதில் ஆழ பதிந்துள்ளது.

நீங்கள் மிக சிறிய விஷயமாக எண்ணி செய்யும் செயல்கள் சில உங்கள் மனைவியில் மனதில் ஆழமான காயங்கள் மிக அழுத்தமாக பதிய காரணமாகிவிடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

செயல் #1 அவநம்பிக்கை –

தம்பதி மத்தியில் முக்கியமாக இருக்க வேண்டியதே இந்த நம்பிக்கை தான். இது இழக்கும் தருணத்தில், தன் கணவனுக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை என்ற தருணத்தில் பெண்கள் மிகுந்த மன வேதனை அடைகிறார்கள்.

செயல் #2 மறுப்பு –

என்ன தான் கோபப்படும் பெண்களாக இருந்தாலும். பெண்களின் மனது குழந்தை போன்றது தான். தாங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களுக்கும் தன் கணவனிடம் இருந்து மறுப்பு மட்டும் தான் பதிலாக வருகிறது எனில் மிகுந்த வருத்தம் அடைவார்கள்.

செயல் #3 கோபம் –

மீண்டும், மீண்டும் தான் செய்யாத, தான் பொறுப்பில்லாத விஷயங்களுக்கு கணவன் தன் மீது கோபப்பட்டுக் கொண்டே இருந்தால் பெண்கள் அதிக மன வேதனை அடைவார்கள்.

செயல் #4 பேரம் –

தான் விரும்பிக் கேட்கும் போது, இந்த விலையில் வேண்டாம், இது போதும், அல்லது இத்தனை வேண்டும், இவ்வளவு போதும் என கூறும் போது பெண்கள் அதிக மன வருத்தம் அடைவார்கள்.

செயல் #5 குற்ற உணர்வு –

செய்யாத தவறுக்கு, தாங்கள் குற்றம் செய்தது போல உணர்வை கணவன், தங்களுக்கு ஏற்படுத்தும் போது மனைவி மிகுந்த மன வருத்தம் அடைகிறார்.

செயல் #6 ஏற்பு –

தன்னை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளாமல், எப்போது பார்த்தாலும் ஏதனும் குற்றம், குறை கூறிக் கொண்டே இருந்தால் மனைவி மனதளவில் பெரிதாக பாதிக்கப்படுகிறாள்

tamil.boldsky

Leave a Reply