இயந்திர கதி

எங்கள் ஊரில் டாக்டர் சுகுமார் Eye Clinic முன்னால் (வியாழக்கிழமை) நின்று கொண்டிருந்தேன். Busy Road.

எதிர்புறத்தில் வயதான மூதாட்டி ஒருவர் கூடை நிறைய கொய்யா பழங்களை தலையில் தூக்கி வைத்து நடந்து வந்து கொண்டிருந்தார். நடைபாதையில் வியாபாரம் செய்பவர் போல.

தெருவில் இருந்த சிறு பள்ளத்தில் தவறுதலாக காலை வைத்தவர் தடுமாறி கூடையை கீழே போட்டு விட்டார்.

பாதி பழங்களுக்கு மேல் உருண்டு தார் ரோடுக்கு வந்துவிட்டது.

அந்த பழங்களை காப்பாற்றுவது சிரமம், அந்த Busy Road ல்.

மீதி பழங்களையாவது காப்பாற்றலாமே என்று Road ஐ Cross செய்ய முற்பட்டேன்.

அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது.

Bilke ல் வேகமாக வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு, பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வந்தார்.

கூடையை கையில் எடுத்து கொண்டு, மின்னல் வேகத்தில்தார் ரோடில் இருந்த பழங்களை பொறுக்கி கூடையில் போட ஆரம்பித்தார்.

அப்போது பள்ளிக்கு வேகமாக சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சட்டென்று நிலைமையை புரிந்து கொண்டு, டிராபிக் கான்ஸ்டபிள் போல நடுரோடில் கையை நீட்டி கொண்டு நின்று , கார், ஆட்டோ எல்லாவற்றையும் ஓரமாக போகும்படி சத்தம் போட்டாள்.

One way ஆனதால் எதிர்புறத்தில் இருந்து வண்டிகள் வரவில்லை.

இளைஞர் தார் ரோடில் கிடந்த எல்லா பழத்தையும் கூடையில் பொறுக்கி போட்ட பிறகு, அந்த சிறுமியும் டிராபிக் கான்ஸ்டபிள் post ஐ resign செய்து விட்டு இளைஞரோடு சேர்ந்து மண் தரையில் இருந்த பழங்களையும் பொறுக்கி போட ஆரம்பித்தாள்.

ஓரிரு பழங்களை தவிர்த்து எல்லா பழங்களும் சேதமில்லாமல் கூடைக்கு வந்துவிட்டது.

சுமார் 10 நிமிடங்களில் இது முடிந்துவிட்டது.

கூடையை மூதாட்டியிடம் கொடுத்தவுடன், அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல முற்பட்ட போது, கண் கலங்கிய அந்த மூதாட்டி சிறுமியின் கையில் இரண்டு பழங்களை கொடுத்து பாசத்துடன் முகத்தை தடவினார்.

அந்த சிறுமி மலர்ந்த முகத்துடன் Thanks பாட்டி என்று விடை பெற்றாள்.

பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்த இளைஞரை சட்டென்று கையை பிடித்தார். இளைஞரும் புன்னகைத்தவாறே பாட்டியின் கைகளை ஆதரவாக தட்டி கொடுத்து விட்டு புறப்பட்டார்.

சொற்களால் நன்றி கூறும் மரபை கூட அறியாத கள்ளங்கபடமற்ற கிராமத்து மூதாட்டி மனம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க அந்த இளைஞர் செல்வதையே பார்த்து கொண்டிருந்தார்.

இயந்திர கதியில் வாழும் மனிதர்களுக்கு இடையே, மனிதநேய மிக்க நல்ல உள்ளங்களும் இருப்பதால்தான் இன்னமும் மழை பொழிகிறது போல…

Leave a Reply