இம்பாலா கார்

ஒரு முறை படப்பிடிப்பின் போது, ராதாவுக்கு வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து வருவதற்கு வாகனம் எதுவும் இல்லை. அப்போது தான் புதிதாக இம்பாலா கார் வாங்கியிருந்தார் சிவாஜி. சாப்பாடு எடுத்து வருவதற்காக அக் காரை சிவாஜியிடம் கேட்டார் ராதா.

‘அண்ணே… அது இம்பாலாண்ணே…’ என்றார் சிவாஜி.

அடுத்த மூன்றே நாட்களில், புதிய இம்பாலா கார் ஒன்றை வாங்கினார் ராதா.

மதிய உணவு நேரத்தில், சிவாஜி இருக்கும் நேரம் பார்த்து, ராதாவின் இம்பாலா கார் அங்கு வந்து நின்றது. அதில், நிறைய வைக்கோல் கட்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.

‘கணேசா… பாத்தியா இம்பாலா காரை….’ என்றார் ராதா.

‘என்னண்ணே… வைக்கோல் கட்டெல்லாம் ஏத்திக்கிட்டு…’ என்றார் சிவாஜி.

‘அது என்ன வெறும் தகரம் தானே… தோட்டத்துக்கு வைக்கோல் ஏத்திட்டுப் போக, வண்டி கிடைக்கலன்னு சொன்னான் வேலையாள். சரி… இம்பாலால ஏத்திக்கோன்னு சொல்லிட்டேன். வைக்கோலை நாம வேற எதுல போட முடியும்… இம்பாலால தான் போட முடியும்…’

#mrradha

Leave a Reply