இன்றுமுதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்

​குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக் கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.
” உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டது. இன்றுமுதல் நீ பரிசுத்தமானவனாகிறாய், ”மோசஸ்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு மோசஸ்”.
“சத்யம் பாஸ்ட்டர் இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?”

“தாராளமாக எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்”
ஓகே பாஸ்ட்டர்.

மோசஸான குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் விஸ்கியை எடுத்து தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.
” உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது. நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய். ஆமேன்… ”

விழுந்துபொரண்டு சிரிச்ச காமெடி 😂😂😂

Leave a Reply