ஆசை இருக்கும்வரை

​★ஆசை இருக்கும்  வரை துன்பம்★

ஒரு குளக்கரையெங்கும் காக்கைகள் கூட்டம். மக்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 
அவற்றைக் கொத்தி எடுத்துக்கொண்டிருந்தன காக்கைகள்.
 அப்போது தரையில் ஒரு பெரிய மீன் பிடித்துப்போடப்பட்டது. 
அச்சமயம் அங்கு வந்த பருந்தொன்று அந்த மீனைக் கவ்விக்கொண்டு உயரே பறந்தது. 
உடனே காக்கைகள் அங்கிருந்த மீனை விட்டுவிட்டு பருந்தைத் துரத்தத் தொடங்கின. பருந்து சென்ற இடமெல்லாம் காக்கைகளும் பின் தொடர்ந்தன.
பருந்து காக்கைகளிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயன்றது. ஆனால் முடியவில்லை. பருந்து களைத்துவிட்டது. ஆனாலும் காக்கைகள் துரத்தின
 கடைசியில் சோர்வு மிகுதியால் பருந்து தன் அலகைத் திறக்க அதன் வாயில் இருந்த மீன் நழுவி கீழே விழுந்தது. உடனே காக்கைகள் பருந்தை விட்டுவிட்டு மீனைப்பிடிக்க கீழே பாய்ந்தன.
ஆசுவாசப்படுத்திக்கொள்ள அருகிலிருந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்தது பருந்து
. காக்கைகள் நம்மைத் துரத்தியது மீனுக்காகத்தான் என்பது புரிந்தது பருந்துக்கு.  துரத்திய உடனே மீனை விட்டு விட்டிருந்தால்  நிம்மதியாக இருந்திருக்கலாம் என்றும் கண்டு கொண்டது. 
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது இந்தக் கதை. 
பருந்து மனிதனைக் குறிக்கிறது. 
மீன் ஆசையையும் 
துரத்தும் காக்கைகள் துன்பங்களையும் குறிக்கின்றன.
 ஆசை இருக்கும்வரை துன்பங்கள் தொடர்கின்றன. ஆசை துறந்தால் துன்பங்கள் மறைகின்றன என்பது இதன் உட்பொருள்

Leave a Reply