​செரிமானம் ஆகவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகளா இதெல்லாம்

#கெட்ட_நாற்றம் : 

சரியாக ஜீரணமாகவில்லை என்றால் கெட்ட நாற்றம் வரும். மூச்சு விடும் போது கேட்ட நாற்றமெடுத்தால் அவசியம் மருத்துவரை சந்திக்கவும். 

அதே போல வியர்வையும் அதிக நாற்றமெடுக்கும்.
 


#ரத்த_சோகை

இரும்புச்சத்து குறைவாக இருந்தால் சரியாக செரிமானம் நடக்காது. இதனால் உங்களுக்கு கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் ஏற்படலாம். தொடர்ந்து இப்படியே இருந்தால் உணவுகளில் இருக்கும் சத்துக்கள் சரியாக உடலில் சேராது கொழுப்பாகவே சேரும் இதனால் உடல் சோர்வடையும். 


#முடி_மற்றும்_நகம் :
 

வெளியில் பார்க்கப்படுகிற முடி மற்றும் நகம் நம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் அவை நன்றாக வளரும். முடி அதிகமாக கொட்டினாலோ அல்லது நகம் அடிக்கடி உடைவது, நிறமாறுவது போன்றவை ஏற்ப்பட்டால் செரிமானம் சரியாக நடைபெற வில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் சரியாக உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. மேலும் மேலும் சத்துக்கள் பற்றாகுறை ஏற்படுவதால் அதன் விளைவுகளும் பெரிதாய் இருக்கிறது.


#பருக்கள் :
 

பருக்கள் என்றாலே சரும பராமரிப்பு, எண்ணெய் அதிகமாக சுரக்கிறது, அழுக்கு சேர்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே செரிமானக்கோளாறு இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றிடும். சரியாக சத்து கிடைக்காததால் தான் சருமம் வலுவற்று இருக்கிறது. இது போன்ற சமயங்களில் எளிதாக அதற்கு பாக்டீரியா தொற்று ஏற்ப்பட்டுவிடும். 


#அலர்ஜி : 

உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் உணவு ஒவ்வாமை ஏற்படும். செரிமானத்திற்கு தேவையான என்சைம்கள் குறைவாக இருப்பதால் சாப்பிடும் உணவு நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதே போல மலச்சிக்கலும் உண்டாகும்.


#உடல்_எடை :
 

சரியாக உணவு ஜீரணமாகவில்லை என்றால் உடல் எடையில் திடீர் மாற்றங்கள் தெரியும். அதிகமாக எடை கூடினாலோ குறைந்தாலோ கவனமாக இருக்க வேண்டும். 


#தூக்கம் :
 

சாப்பிட்டவுடன் அதீத தூக்கம் வந்தால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்க. 
அதே போல குறைந்த உணவு சாப்பிட்ட உடனேயே வயிற்று உப்பியதைப் போன்று தோன்றினாலும் செரிமானம் சரியாக நடைபெறவில்லை என்று அர்த்தமாகும்.

Leave a Reply