நமது உடலைப்பற்றிய நம்பமுடியாத பல உண்மைகள் உண்டு அறிவோம் தெரிவோம்! 

🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
வெளி உலகத்தை பற்றி நிறைய தெரிஞ்சுகொள்ள ஆர்வமாக இருக்குற எமக்கு, நமது சொந்த உடம்பைப் பற்றி எவ்வளவு தெரியும்…? உங்களுக்கே தெரியாம உங்க உடம்புக்குள்ள எவ்வளவு அதிசயங்கள் இருக்கு தெரியுமா…?? நம்ம சொந்த உடம்போட உண்மையான வியப்பூட்டுற சில விஷயங்களை தெரிந்துகொள்ள நாம் என்றும் ஆவலாகவெ இருப்போம் இதோ பல பல்சுவை தகவல்கள் உங்களுக்காக..

1.) எச்சில் எல்லாருக்கும் தெரியும். பொதுவாவே எச்சிலைப் பார்த்தா எல்லாருக்கும் அருவருப்பு வரும். ஆனா, உங்க வாழ்நாளில் எவ்வளவு எச்சிலை உங்க உடம்பு உருவாக்கும்னு தெரியுமா. ஒரு நாளைக்கு 0.75லிட்டர்ல இருந்து 1.5 லிட்டர் வரைக்கும் நாம்ம வாயில எச்சில் சுரக்குதாம். ஒரு மனிதனோட வாழ்நாள் முழுக்க சுரக்கிற எச்சிலை வைச்சு, 2 நீச்சல் குளத்தை நிரப்பலாம்.

2.) நம்ம உடல் முழுசுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சேர்ப்பது ரத்த சிவப்பணு. இந்த ரத்தச் சிவப்பணு நம்ம ஃபுல் பாடியையும் ஒரு ரவுண்ட் அடிசிட்டு வர எடுத்துக்கிற டைமிங் வெறும் 60 நொடி தானாம். அதாவது, ரத்த சிவப்பணு நரம்பு வழியா, ஒரு முறை நம்ம உடல் முழுசையும் சுத்தி வர ஒரு நிமிஷம் போதுமாம்.

3.) நம்ம ஒவ்வொருத்தருக்கும் கண்ணோட கலர் வித்தியாசமா இருக்கும். பெரும்பாலும் எல்லாருக்கும் கறுப்பு கலர்ல தான் கண் கருவிழி இருக்கும். ஆனா, என்னதான் இப்ப கறுப்பா இருந்தாலும் நாம பிறக்கும் போது அது புளு கலர்ல தான் இருக்குமாம். உண்மை தாங்க, உலக்கத்தில் பிறக்குற பெரும்பாலான குழந்தைகளோட கண்கள் நீல நிறத்தில தான் இருக்குமாம். வெளி வெளிச்சத்தில இருக்கிற UV ஒளி (புற ஊத ஒளிக்கற்றை) தான் குழந்தையோட கண்ணோட ஒரிஜினல் கலரைக் கொண்டு வருமாம்.

4) நம்ம கை, கால்ல இப்ப தான் நகம் வெட்டின மாதிரி இருக்கும். ஆனா, கொஞ்ச நாளிலேயே வளர்ந்துடும். ஆனா, நம்ம நகம் புதுசா வேரிலிருந்து ஃபுல்லா வளர கிட்டத் தட்ட 6 மாதம் ஆகுமாம்.

5) பொதுவாவே, நம்ம எல்லாருக்கும் அடிக்கடி தோல் உரியும். நம்ம வாழ்நாள் முழுசும், உடம்பில இருந்து மொத்தமா எவ்வளவு தோல் உரியும்னு தெரியுமா. வாழ்நாள் முழுசும் நம்ம உடம்பில இருந்து உரிந்து விழுற தோலோட எடை கிட்டத் தட்ட 18 கிலோ…!!

6) நம்ம உடம்பில் மூளை மட்டும் நம்ம எடுத்துக்கிற ஆக்ஸிஜன் மற்று எனர்ஜியில் இருந்து 20 % பயன்படுத்திக்குமாம்.

body2

7) நம்ம கிட்னில 1 மில்லியன் ஃபில்டர்கள் இருக்காம். அதோட நம்ம கிட்னியால, ஒரு நிமிஷத்துக்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியுமாம். 8) பெண்களோட கருப்பையில், 500,000 கருமுட்டைகள் உருவாகுமாம். ஆனால், இதுல 400 முட்டைகளுக்குத் தான் குழந்தையாக உருவாக வாய்ப்பு கிடைக்குமாம்.

9) நம்ம மேல வியர்வை நாற்றம் வருதே அது வெறும் நாற்றம் இல்ல. ஒவ்வொருத்தரோட அடையாளம். உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் இந்த நாற்றம் மாறுபடுமாம். இரட்டையர்களைத் தவிற.

10)வயிற்றுக்குள்ள சாப்பாடு செறிக்குது. ஆனா, உள்வயிறு அல்லது வயிற்றோட உட்பகுதி மட்டும் எப்படி செறிமானம் ஆகாம இருக்கு…?? உண்மையாவே, வயிற்றோட உட்பகுதியும் செறிமானமாகும். ஆனா, செறிக்கிறதை விட ரொம்ப வேகமா உள்வயிற்றோட செல்கள் வளர்ச்சி அடைந்து அதை ஈடு கட்டிடுமாம்.

11) மனிதர்கள் 90% பார்வையை நம்பித்தான் இருக்காங்க. நம்ம சுற்றுப் புறத்தைப் பற்றி நாம தெரிஞ்சுக்கிற 90% விவரங்கள் நம்ம பார்வை மூலமா தான் கிடைக்குதாம்.

12) உங்களை உங்களாலேயே டிக்கிள் பன்ன முடியாது. புரியலயா.. கிச்சுக் கிச்சு… உங்களாலேயே உங்களை கிச்சு கிச்சு மூட்டிக்க முடியாது.

13) நம்ம எலும்புகள் எவ்வளவு வலுவானது தெரியுமா…? ஒரு பவுண்ட் காய்ந்த சிமெண்ட் கான்கிரீட், ஒரு பவுண்ட் மனித எலும்பு இதை ரெண்டுத்தையும் வச்சு டெஸ்ட் பன்னினதுல மனித எலும்பு கான்கிரீட்டை விட 4 மடங்கு வலுவானதுன்னு நிரூபனமாகி இருக்காம்.

14) நம்ம உடம்பிலேயே ரொம்ப நீளமான உறுப்பு எது தெரியுமா….?? தோல் தான். நல்ல வளர்ந்த ஆணோட தோலை முழுசா நீட்டி அளந்தா 20 சதுர அடிக்கு வருமாம்.

15) நாம எதையாவது சுவைக்கனும்னா அந்தப் பொருள் முதல்ல எச்சில்ல கரையனுமாம். இல்லைன்னா, நம்மால சுவைய உணரவே முடியாது. நம்பலைன்னா எச்சில் இல்லாம டேஸ் பன்னி பாருங்க…

16) ஒரு சராசரி ஆணால ஒரு நாளைக்கு 10 மில்லியன் விந்தணுவை உற்பத்தி செய்ய முடியுமாம். அதாவது ஒரே ஒரு ஆணோட விந்துவை வச்சே உலகத்துல இருக்கிற மொத்த மக்கள் தொகைய வெறும் 6 மாதத்துல உருவாக்கிடலாமாம்.

17) மனிதர்கள் வெப்ப ரத்த உயிரிகள்னு எல்லாருக்கும் தெரியும். நம்ம உடம்பு எவ்வளவு வெப்பத்தை உற்பத்தி செய்யுதுன்னு தெரியுமா…?? நம்ம உடம்பு 36.5–37.5 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையக் 3.5 லிட்டர் நம்ம உடல் வெப்பத்தை வச்சு தண்ணீரை கொதிக்க வைக்க வெறும் 30 வினாடி போதுமாம்.

18) நம்ம எவ்வளவு உயரமா இருந்தாலும், தூங்கும் போது கிட்டத்தட்ட 1 செ.மீ. உயரம் குறைஞ்சுடுவோம். காரணம், நம்ம முதுகெலும்புல இருக்கிற குறுத்தெலும்புகள் நாம் தூங்கும் போது, சுருங்கிடுமாம்.

19) நம்ம உடம்புல கிட்டத்தட்ட 5 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் இருக்காம். இந்த வியர்வைச் சுரப்பிகள் ஒவ்வொன்னும், தினமும் 400 மில்லி லிட்டர் வியர்வையைச் சுரக்குமாம்.

Leave a Reply