தலைவலி என்றால் என்ன? எப்படி வருகிறது?

தலைவலி என்றால் என்ன? எப்படி வருகிறது?
??????????????
தலைவலியால்-headache -cephalalgia -இன்று உலகெங்கும் பலர் அவதிப்படுகின்றனர்.
பொதுவாக தலைவலியை முதன்மைத் தலைவலி,இரண்டாம் நிலைத் தலைவலி (primary headache ,secondary headache) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.இருப்பினும் 150 ற்கு மேற்பட சிறு பிரிவுகளாக பிரித்துக் கூறுகிறார்கள்.

முதன்மைத் தலைவலிகள், என்பது வேறு எந்த நோய் காரணமாகவும் ஏற்படாமல் பொதுவான காரணங்களால் ஏற்படுவதாகும்.

cluster headache என்பது கண் பகுதியில் அல்லது கண்ணின் கீழே வலியுடன்,துடிப்பது போல்,குத்துவது போல்,தலையின் ஒரு பக்கத்தில் வலி,நள்ளிரவில் தூங்கி 2-3 மணியின் பின்னர் வலியினால் எழ வைப்பது என நாள் முழுவதும் இரண்டு மூன்று தடவைகள், 15 நிமிடம் முதல் 3 மணித்தியாலங்கள் வரை இருக்கும். அனேகமாக தினமும் அதே நேரத்தில் வந்து விடுகிறது.சில மாதங்கள் குறிப்பிட்ட காலங்களில் தொடருகிறது.இது நரம்பியல் கோளாறினால்(neurological disorder ) பொதுவாக ஏற்படுகிறது.சில சமயம் மூளையில் உள்ள hypothalamus பகுதி அதிக செயற்பாடு காரணமாகவும் வரலாம். சாதாரணமாக உணவு,ஹோர்மோன்,மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுவதில்லை.அத்துடன் மக்களிடம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

சரியான காரணம் கண்டு பிடிக்கப்படாத மைகிரேன் migraines தலைவலி, மாதத்தில் ஒன்றில் இருந்து நான்கு முறை வந்து, நான்கு மணியில் இருந்து, 3-4 நாட்கள் தொடரக் கூடிய பொறுக்க முடியாத தலைவலியாகும்.இதற்கு மூளையில் உள்ள குருதி நாளங்கள், மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக(neurovascular ) ஏற்படலாம். இதன் போது குமட்டல்,வாந்தி,பசியின்மை,வயிற்றுப் பிரச்சனகளும், குழந்தைகளாயின் நிற மாற்றம்,காச்சல்,மங்கலான பார்வை,வயிற்றுப் பிரச்சனையும் ஏற்படலாம்;

Transformed migraines -Mixed headache syndrome – Trigeminal autonomic cephalalgia (TAC), cluster headache and paroxysmal hemicrania -என்பது மேலே சொன்ன இரண்டும் கலந்து வரும் தலைவலி ஆகும். இதுவும் cluster headache உம் அரிதாகவே வரக் கூடியதாக இருப்பினும்,முற்றாக குணப்படுத்துவது முடியாது என்றே சொல்லலாம்.வலியை நிறுத்த பல முறைகள் உண்டு.சிலருக்கு cluster headache போல் குமட்டல், வாந்தி, ஒளி, ஒலி போன்றவற்றினால் சகிப்புத் தன்மை இன்மை போன்ற குறிகளுடன் பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் ஒற்றைத்தலைவலியாக வருகிறது. (Hemicrania-ஒற்றைத்தலைவலி)

பொதுவாக தினமும் அல்லது அடிக்கடி வந்து போகும், chronic -Tension headaches-tension-type headache – chronic nonprogressive headaches என்பது,உணர்ச்சிபூர்வமான சமய்ங்களில்,மன உளைச்சல், நண்பர்கள்,குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை,அலுவலகம்,பள்ளி-கல்லூரிகளில் ஏற்படும் சம்பவங்கள்,உணவு எடுக்காது விடுவது,தூக்க மாற்றம்,மது-hangover headache- , மருந்துகளின் பக்க விளைவு,அதிக மருந்துகள் பாவிப்பது-rebound headaches -,கண்-கழுத்து-முதுகு களைப்பு-strain-, மனஇறுக்கம்-tension-போன்றவையும், சத்தம்,அதிக ஒளி, வேதிப்பொருட்கள்,கால நிலை மாற்றம்,சில உணவுப் பொருட்கள் எடுப்பதால்,தசை நார்களில்(muscle ) ஏற்படும் பிடிப்பு இப்படிப் பலவற்றால் ஏற்படுகிறது.
?

இது தவிர கட்டி,குருதிக் கசிவு போன்ற ஏதாவது நோய்கள் காரணமாக வருவது, பக்க விளைவு போல் வருவதை இரண்டாம்தர நிலை தலைவலி என்கிறார்கள்.

Sinus headaches என்பது கன்ன எலும்புகள் வலியுடன்,மூக்கு நெற்றி வலியும்,முகம் வீக்கம்,மூக்கில் இருந்து நீர் சிந்துவது இப்படியானவை இருக்கும்.

Acute headaches என்பது சுவாச (sinus infection ) தொற்று அல்லது ஒருவரைக் கண்டதும் கூட திடீரென ஏற்பட்டு மறையும்.

Hormone headaches பொதுவாக பெண்களுக்கு ஊக்கிகள்-hormone- மாற்றமடையும் வேளைகளில்-hormone levels – (menstruation, pregnancy, menopause ) ஏற்படுகிறது.

Chronic progressive headaches-traction – inflammatory headaches -என்பது இன்று பொதுவாகப் பலருக்கும் ஏற்படும் தலைவலியாகும். Brain tumors போன்ற நோய்கள் வரும் போது மூளை தலைப்பகுதியில் கோளாறு ஏற்பட்டு வருகிறது.

அனேகமாக தலைவலி,மைகிரேன் பெற்றொரிடமிருந்து (Hereditary) வருவது அறியப்பட்டுள்ளது.

தலைவலி மூளை நாளங்கள்,சுற்றியுள்ள நரம்புகளுக்கு இடையில், வலி அறிவிப்பு-signal- மூளைக்கு அனுப்பப்படுவதால் ஏற்படுகிறது.தலையில் உள்ள சில நரம்புகள், நாளங்கள், தசை நார்கள் வலி சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்புகிறது.

மூளையில் வலியுணரிகள் -pain receptors -nociceptor -இல்லாததால், மூளை வலியை உணராது. தலைப் பகுதியில் அமைந்த சில நரம்புத் தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள், மூளையுறை, குருதிக் கலங்கள் என்பன வலியை உணரக்கூடியவை. தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன. தலையில் காணப்படும் தசைநார்களும் வலியை உணரக்கூடியவை.

தொற்று,காச்சல்,சளி,சைனஸ்,காதில் தொற்று,தொண்டை தொற்று போன்றவற்றின் போதும் மேற்சொன்ன காரணங்களின் போதும் இந்த வலி சமிக்ஞைகள் மூளைக்கு அனுப்பப்படுகின்றன.
ஏன் அனுப்பப்படுகின்றன? இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேற்சொன்ன தலைவலிகளை தவிர்க்க குறைக்க ,காற்றாட வெளியே செல்வது, குளிர்ந்த நீரில் குளிப்பது,சிறிய தூக்கம்,ஓய்வு,தண்ணீர் குடிப்பது, போன்றவை பொதுவாக முதன்மைத் தலைவலியை சரியாக்கி விடும்.அதிகமாகும் போது வீட்டு மருத்துவ முறைகளை அல்லது சில மாத்திரைகள் எடுக்கும் போது மறைந்து விடலாம். சிலருக்கு கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் வேறு நோய்கள் காரணமாகவும் ஏற்படலாம். தொடருமானால் மருத்துவரிடம் காட்டுவது சிறந்தது.

Leave a Reply