கல்லீரல்

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், கல்லீரல் நோய்கள் ஒருவருக்கு சீக்கிரம் வந்துவிடுகிறது. கல்லீரல் நோய்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், தடுக்க முடியும். கல்லீரலில் ஏற்படும் முக்கியமான ஓர் பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு.

கல்லீரலில் கொழுப்பு செல்கள் அதிகமாக இருக்கும் நிலை தான் கல்லீரல் கொழுப்பு. கொழுப்புச் செல்கள் அதிகமானால் கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிக்கப்பட்டு, அதனால் நாளடைவில் கல்லீரல் செயலிழக்கக்கூடும். மேலும் இந்நிலையில் கல்லீரல் வீங்கி இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பிரச்சனையானது சர்க்கரை நோய் மற்றும் குண்டாக இருப்பவர்களை அதிகம் தாக்குவதோடு, கொழுப்புமிக்க உணவுகளை உண்போரையும் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கல்லீரல் கொழுப்பு ஏற்படாமல் இருக்கவும், கல்லீரலில் நச்சுக்கள் சேராமல் இருக்கவும் ஒருசில வழிகளை பின்பற்றி வந்தால், நிச்சயம் கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் கிராமத்து கை வைத்தியங்கள் என்பதால் பயப்படாமல் மேற்கொள்ளலாம்.

எலுமிச்சை மற்றும் தண்ணீர்

ஒரு மாதம் தொடர்ந்து எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டினை அதிகரிக்கும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

மஞ்சள் மற்றும் தண்ணீர்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, 15 நாட்கள் தினமும் இரண்டு டம்ளர் குடித்து வர, கல்லீரலில் உள்ள கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளதால், அது கல்லீரலை சுத்தம் செய்ய உதவும். அதிலும் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பின், தொடர்ந்து 25 நாட்கள் தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, விரைவில் குணமாகியிருப்பதை உணர்வீர்கள். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

அதிமதுரம்

அதிமதுரம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் திசுக்களின் அளவை அதிகரித்து, கல்லீரல் நோய்களைத் தடுக்கும். அதற்கு அதிமதுரத்தை பொடி செய்து, அதனை ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, நல்ல நிவாரணம் கிடைக்கும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

வினிகர் மற்றும் தண்ணீர்

ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்படுவதோடு, அழுக்குகளும் வெளியேறி, கல்லீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

க்ரீன் டீ

ஆய்வு ஒன்றில் தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, கல்லீரலின் இயக்கம் அதிகரித்து, அதன் ஆரோக்கியம் மேம்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

முக்கியமாக அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, கொழுப்புமிக்க உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்த்து, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

உடல் சூட்டினால் இத்தனை பிரச்சனையா? சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க!

உடல் சூடு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். வாத உடம்பு உள்ளவர்களை இந்த பிரச்சனை அதிகமாக தாக்கக்கூடியதாகும். இதனை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நமது உடலை பல்வேறு நோய்கள் தாக்கிவிடும். இதில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தால், வாய்ப்புண், நாக்குப்புண், வயிற்றில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

இந்த உடல் சூட்டை போக்க சித்த மருத்துவத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளன. உங்களது உடலுக்கு ஏற்ப மருத்துவ முறையை நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாம். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

வாரத்தில் ஒருமுறையாவது நல்லெண்ணெய்யை தேய்த்து குளியல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். உடலில் வெப்பநிலை சமமாகும்.

உறங்கும் போது உள்ளங்கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உறங்கலாம். இதனால் உடலில் உள்ள அதிக வெப்பம் நீக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை சமமாகும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

காலிஃபிளவர் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்.

நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்டால் உடல்சூடு தணியும்.முள்ளிக்கீரையை சிறிது துவரம் பருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.

மணத்தக்காளி கீரையை சிறுபருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை நீரில் கழுவி, மிளகு, பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து, சிறிது நெய் விட்டு சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப் பிஞ்சு பச்சையாக அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

ஆவாரம்பூவின் பெரிய இதழ்களை எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். காலை மாலை தேயிலைக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகித்துவர உடல் சூடு தணியும்.

ஒரு கைப்பிடி அளவு மகிழம்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அடுப்பில் கொதிக்க வைத்து பின்னர் ஆறியவுடன் வடிகட்டவும். காலை அரை டம்ளர், மாலை அரை டம்ளர் வீதம் 25 நாட்கள் குடித்துவர உடல் சூடு தணியும்.

கர்ப்ப காலத்தில் இதை சாப்பிட்டா ஆபத்து வரும்னு சொல்லறது வெறும் கட்டுக்கதை தான்னு தெரியுமா?

தர்பூசணிப்பழம் மிகவும் சுவையானது.. அதிக நீர்ச்சத்துக்களை கொண்டது, இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட, ஆனால் இதனை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாது என்று சிலர் கூறுவார்கள்.. இது உண்மைதானா? தர்பூசணி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது ஆபத்தானதா? எதற்காக இப்படி சொல்கிறார்கள்.. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

கர்ப்ப கால சர்க்கரை நோயானது தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் உண்டாகிறது என்றும் எனவே அதிகளவு சர்க்கரை நிறைந்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் ஒரு கட்டுக்கதை நிலவி வருகிறது.

ஆனால் உண்மையில் தர்பூசணிப்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக உள்ளது. இது சர்க்கரை நோய் பாதிப்பை அதிகப்படுத்தாது. 10 கப் தர்பூசணிப்பழம் சாப்பிட்டால் தான் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
தர்பூசணிப்பழத்தில் சர்க்கரை இல்லை, ஆனால் இது குளூக்கோஸின் அளவை அதிகரிக்க செய்யும். தினமும் ஒன்று அல்லது 2 கப் தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு எந்த வித கெடுதலும் உண்டாகாது. மாறாக நன்மைகளே கிடைக்கும். …

கருப்பையில் இருக்கும் குழந்தையின் எடை நன்றாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதற்காக குழந்தையின் எடை மிக அதிகமாக இருக்க கூடாது. சிலர் தர்பூசணி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தினை முன் வைக்கின்றனர். ஆனால் இது உண்மை இல்லை.
நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை விட தர்பூசணி சாப்பிடுவது கர்ப்ப காலத்திற்கு மிகவும் நல்லது. இதில் 92% தண்ணீர் உள்ளது மீதி, 7.55 % கார்போஹைட்ரைட் உள்ளது. இது கொழுப்பு அற்றது. எடையை கூட்டாது. இரண்டு கப் தர்பூசணிப்பழத்தில் 80 கலோரிகள் மட்டுமே உள்ளது. தர்பூசணிப்பழத்தை சாப்பிடும் போது உடல் எடையை பற்றி யோசிப்பது கடைசியாக தான் இருக்கும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

தர்பூசணி சாப்பிடுவது உடலை மிகவும் குளிர்ச்சியை உண்டாக்கும். எனவே தர்பூசணியை சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நீர்ச்சத்து என்பது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஒன்று. இரண்டு கப் வரை தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது.
ஆனால் காய்ச்சல், சளி உள்ள போதும், குளிர்க்காலங்களிலும் தர்பூசணிப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மாறிவிடும். சிலர் தர்பூசணி சாப்பிடுவதால் இது உண்டாகும் என்று கூறுவார்கள் ஆனால் இல்லை. தர்பூசணி உணவை சரியாக செரிக்க வைக்கவும், உணவுக் குழாயை சுத்தம் செய்யவும் உதவியாக இருக்கும்.

நீங்கள் புதிதாக அரிந்த அல்லது புதிதாக ஜூஸ் செய்யப்பட்ட தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவது தான் சிறந்ததாகும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

தர்பூசணிப் பழத்தை கர்ப்ப காலத்தில் ஏன் சாப்பிட கூடாது என்பதற்கான சில கட்டுக்கதைகளையும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மைகளை பற்றியும் பார்த்தோம். இப்போது ஏன் தர்பூசணிப் பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி காணலாம்.

கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் காய்ச்சல், சோர்வு, வாந்தி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதில் இருந்து விடுதலை பெற்று சோர்வையும் களைப்பையும் போக்க தர்பூசணி மிகவும் உதவியாக இருக்கும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

நீர் என்பது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. போதிய அளவு நீரை குடிக்கவில்லை என்றால் உடலில் வறட்சி உண்டாகிவிடும். இதனை போக்க தர்பூசணிப்பழம் உதவியாக உள்ளது.

கர்ப்ப காலத்தில் உடலின் பல்வேறு பகுதிகளில் தசைகளில் உண்டாகும் வலிகளுக்கு தர்பூசணிப்பழம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.

தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கும்.

குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றி அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை நிறுத்த இத குடிங்க

ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால், அவை குடலில் தங்கி, மலச்சிக்கல் ஏற்பட்டு, அதனால் வேறு சில பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட நேரிடுகிறது. கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு உணவுகள் தான் உதவி புரியும். ஆகவே குடலை சுத்தப்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அடிக்கடி உட்கொண்டு வர வேண்டும். மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

கீழே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள். முக்கியமாக குடல் சுத்தமாக இருந்தால், உடல் எடை வேகமாக குறையும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!

கற்றாழை

கற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக கொண்ட ஓர் செடி. இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கற்றாழை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான பாதை மற்றும் குடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, செரிமான பாதை சுத்தமாகிவிடும். மேலும் இது அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகளை நிறுத்தும்

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், முழு தானியங்கள், பார்லி, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குடல் சுத்தமாகும். அதுமட்டுமின்றி நார்ச்சத்துள்ள உணவுகள், குடலில் உள்ள நீரால் மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற உதவும்.

ஆப்பிள்

ஆப்பிள் மற்றொரு சிறப்பான குடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருள். நீங்கள் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டால், ஆப்பிளை சாப்பிடுங்கள். இதனால் உங்கள் குடல் சுத்தமாகி, கழிவுகள் எளிதில் வெளியேற்றப்பட்டு, குடலியக்கம் சீராக்கப்படும். மேலும் ஆப்பிளில் பெக்டின், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை உள்ளதால், அவை குடலில் நீரை தேக்கி வைத்து, குடலியக்கம் சீராக நடைபெற உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளதோடு, குடலைச் சுத்தம் செய்யும் தன்மையும் வாழைப்பழத்திற்கு உள்ளது. எனவே உங்கள் குடல் சுத்தமாக, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டுமானால், தினமும் ஒரு வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.

தயிர்

தயிர் கூட குடலை சுத்தம் செய்யும். மேலும் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், இது செரிமானத்தை சீராக்கவும், உணவில் உள்ள சத்துக்களை குடல் எளிதில் உறிஞ்சவும் உதவும். எனவே தினமும் ஒரு கப் தயிரை உட்கொண்டு, உங்கள் குடலை தினமும் சுத்தம் செய்து வாருங்கள்.

பால்

பால் குடலில் உள்ள செரிக்கப்படாத உணவுகளை எளிதில் செரித்து, டாக்ஸின்களை வெளியேற்றும். எனவே இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வாந்தால், குடல் சுத்தமாகும். மேலும் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

வெண்ணெய் பழம் (Butter Fruit)

அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் புரோட்டீன்களும், இதர சத்துக்கள் வளமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வெண்ணெய் பழம் குடலில் நீரைத் தக்க வைத்து, குடலியக்கத்தை சீராக்கும். எனவே அடிக்கடி வெண்ணெய் பழ மில்க் ஷேக் குடித்து உங்கள் குடலை சுத்தப்படுத்துங்கள்.

பூண்டு

பூண்டு சாப்பிடுவதால், உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும். குறிப்பாக பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும். அதற்கு பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது பாலுடன் சேர்த்தோ எடுத்து வரலாம்.

Leave a Reply