கர்ப்பமாக இருக்கும்போது செய்யவேண்டிய முக்கியமான பரிசோதனைகள் – முழு அலசல்

​ஒரு பெண்… கர்ப்பமாக இருக்கும்போது செய்யவேண்டிய முக்கியமான பரிசோதனைகள் – முழு அலசல்
திருமணம் ஆன ஓராண்டுகூட முழுமையடையாதது. அதற்குள் என்னங்க ஏதாவது விசேஷமா என்றுகணவனிடம், மனைவியிடம், கணவனின் உறவினரிடம், மனைவியின் உறவினரிட ம் என்று தனித்தனியே பார்ப்பவர்கள் அத்த‍னை பேரும் கேட்டா ர்கள். குறிப்பிட்ட‍ காலக்கெடுவுக்களுள் அந்த பெண் இயற்கை யாக கருத்தரித்து

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புத தருணம். ‘கருவுறுதல்’ தாய்மைக்குப்பா தை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல்.
நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைக ளும் புதிய உயரத்தை எட்டி யிருக்கும் இன்றைய நிலை யில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும்வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகா ப்பானதாக ஆக்க முடிகிறது. இக்காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் என்ன?:
1. சிறுநீரில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Pregnant test):

வழக்கமாக வரும் நாளிலிருந்து ஒரு வாரம்வரை மாதவிலக்கு தள்ளிப் போனா லோ, அந்த காலத்தில் லேசாக தலைச்சுற்றல் இருப்பது போல் உணர்ந்தாலோ, கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்நேரத்தி ல் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதி காலை சிறுநீரைபரிசோதிப்பது நல்லது. ஆனால் கட்டாயமி ல்லை. சிறுநீரில் ‘ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோ பிக் ஹார்மோன்’ (Human Chorionic Gonadotropic Hormone -hCG) இருக்கிறதா என்று சோதிக்கும் பரிசோதனை இது. இந்த ஹார்மோன் சிறுநீரில் காணப்பட்டால், பாசிட்டிவ் என்று கூறுவார்கள். இது கர்ப்பத்தை உறுதி செய்யும்.

2. ரத்தத்தில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Blood hCG test):

சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் அடைந்திருப்பதில் சந்தேக ம் வரும்போது, ரத்தத்தில் மேற்சொன்ன ஹார்மோன் அளவை ப் பரிசோதித்து உறுதிசெய்வது வழக்கம். இது 5 mIU/ml க்குக் கீழே இருந்தால் கர்ப்பம் இல்லை. அதற்கு மேல் இருந்தால் கர்ப்பம் உறுதி.

ரத்தத்தில் hCG அளவு
கருத்தரித்து mIU/ml
7 நாட்கள் 0/ 5
14 நாட்கள் 3 /426
21 நாட்கள்18 /7340
28 நாட்கள்1080 /56500
35 −42 நாட்கள் 7650 /229000
3. ரத்த அழுத்தப் பரிசோதனை:

கர்ப்பம் உறுதியானதும், கர்ப்பிணிக்கு ரத்த அழுத்த த்தை அளந்துகொள்ள வேண்டு ம். இது 120/80 மி.மீ. மெர்குரி என இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை மருத்துவரிடம் போகும்போதும் இதைப் பரிசோதி த்துக்கொள்ள வேண்டும். இது 140/90-க்கு மேல் இரு ந்தால், உயர் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம் . அப்போது சிகிச்சை தேவைப்படும்.

4. உடல் எடை:

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிக்கு ஒவ்வொருமாதமும் 1/2 கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை கூடலாம். கருத்தரி த்ததில் இருந்து பிரசவம் ஆகும்வரை மொத்தமாக 10 முதல் 12 கிலோவரை எடை கூடலாம். ஏற்கெனவே உடல் எடை அதிகமாக இரு ந்தால், 8 கிலோவரை கூடலாம். உடல் எடை மிக அதிகமென்றால், பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். எனவே, எடைக் கட்டுப்பாடு அவசியம்.

5. அடிப்படை ரத்தப் பரிசோதனைகள்:
a) ஹீமோகுளோபின் மற்றும் ஹிமட்டோகிரிட் பரிசோதனை கள்:
இவை கர்ப்பிணியின் உடலில் தேவையான அளவுக்கு ரத்தம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. இந்த அளவுகள் குறைவாக இருந்தால், ரத்த சோகை உள்ளதாக அர்த்தம். அதற்கு சிகிச்சை தேவைப்படும்.

b) தட்டணுக்கள் பரிசோதனை:

ரத்தத்தில் தட்டணுக்கள் (Platelets) குறைவாக இருந்தால் பிரசவ நேரத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். இச்சோதனை மூலம் இந்த ஆபத்தைத் தவிர்க்கலாம்.
c) ரத்த வகை மற்றும் Rh பிரிவுப் பரிசோதனைகள்:
கர்ப்பிணிக்குத் தீவிர ரத்தசோகை இருக்கும்போதும், பிரசவத்தி ன்போது உதிரப்போ க்கு மிக அதிகமாக ஏற்பட்டாலும், ரத்தம் செ லுத்த வேண்டி வரும். அதற்கு தாயின் ரத்த வகையைத் தெரிந்தி ருக்க வேண்டும்

d)  குழந்தைக்கு ரத்தம் Rh பாசிட்டிவ், தாய்க்கு ரத்தம் Rh நெகட்டிவ் என இருந்தால், இரண்டாவது பிரசவத்தில் குழந்தைக்குப் பிரச்சினை (Rh incompatibility ) ஏற்படலாம். அதைத் தவிர்க்க தாய், சேய் இருவருக்கும் Rh பிரிவு தெரி ந்திருக்க வேண்டும். இப்பிரச்சினையைத் தவிர்க்க கர்ப்பி ணிக்கு ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ (Indirect Coomb’s test) செய்யப்படும். இது நெகட்டிவ் என்று முடிவு தெரிவித்தால், குழந்தை பிறந்த 72 மணி நேர த்துக்குள் தாய்க்கு ‘ஆர்ஹெச் இமுனோகுளோபுலின்’ (Anti – D) ஊசி மருந்தைச் செலுத்த வேண்டும்.

e) ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை:
கர்ப்பிணிக்கு ஏற்கெனவே நீரிழிவு இருந்தாலும், கர்ப்ப கால த்தில் புதிதாக ஏற்பட்டாலும், ரத்த சர்க்கரையை நன்கு கட்டு ப்படுத்த வேண்டும். ஏற்கனவே நீரிழிவு இருக்கும் கர்ப்பிணி க்கு, வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை 90 மி.கி./டெ.லி. என வும், சாப்பிட்டு 2மணிநேரம் கழித்து 120மி.கி./டெ.லி, மற்றும் ஹெச்பிஏ1சி (HbA1C) அளவு 6.5%க்கும் கீழே இருந்தால், நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம். இல்லையென்றால், இன்சுலின் சிகிச்சை தேவைப்படும். 

சிலருக்குக் கர்ப்பகாலத்தில் மட்டும் நீரிழிவு ஏற்படும். இதைத் தெரிந்துகொள்ள மருத்து வரின் முதல் சந்திப்பு அன்றும், 4-வது, 7-வது கர்ப்ப மாதங்க ளிலும் கர்ப்பிணியை 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச்செ ய்து, 2 மணி நேரம் கழித்து ரத்தச் சர்க்கரையைப் பரிசோதி க்கும்போது 140 மி.கி./டெ.லி.க்குக் கீழே இருந்தால், அவரு க்கு நீரிழிவு இல்லை; இதற்கு அதிகமென்றால், கர்ப்ப கால நீரிழிவு என்று அர்த்தம்.

Leave a Reply