இந்த 10 பழக்கங்கள் உங்கள் சிறுநீரகத்தை நிச்சயம் பாதிக்கும்.

இந்த 10 பழக்கங்கள் உங்கள் சிறுநீரகத்தை நிச்சயம் பாதிக்கும்….
????????????

இரத்ததில் இருந்து அழுக்கை சுத்திகரிக்க சிறுநீரகம் பயன்படுகிறது.
நமது சில பழக்கங்கள் சிறுநீரகம் செயலிழக்க அல்லது கோளாறுகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
..
1. மது அருந்துவது :

அதிக அளவு மது அருந்துவதால் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் சிறுநீரகம் பாதிக்கிறது. மேலும் மது அருந்துவது கல்லீரலை சேர்த்து பாதிக்கிறது.

2. சிறுநீரை அடக்குதல் :
சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தும் உள்ளது.

3. தண்ணீர் பற்றாக்குறை :

போதுமான அளவு தண்ணீர் அருந்த தவறினால் இரத்ததில் உள்ள அழுக்கு சிறுநீரகத்தில் குவிய ஆரம்பித்து விடும். நிச்சயம் இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

4. அதிக அளவு சர்க்கரை :

ஆராய்ச்சி முடிவுகள் படி நாள் ஒன்றுக்கு 2 குவளை சர்க்கரை கலந்த பானம் பருகுவதால் சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

5. அதிக அளவு உப்பு :

அதிக அளவு சோடியம் நம் உடலில் இருந்தால் சிறுநீரகம் செயலிழக்க வழி வகுக்கும். ஏனென்றால் உடலுறுப்புகளில் அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க உப்பு ( சோடியம் ) காரணமாக உள்ளது.

6. தூக்கமின்மை :

இரவில் போதுமான அளவு தூக்கம் இல்லையென்றால் சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்படும். காரணம் என்னவென்றால் இரவில் தான் சிறுநீரகம் பழுது நீக்கமடைகிறது.

7. வைட்டமின் குறைபாடுகள் :

நாம் உண்ணும் உணவை பொறுத்தே சிறுநீரகத்தின் ஆரோக்கியம் உள்ளது. நம் உடலில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் குறைந்தால் சிறுநீரகம் சரிவர இயங்காமல் போகும்.

மெக்னீசியம்
வைட்டமின் பி6.
8. தேனீர் அருந்துவது :

தேனீர் அருந்துவதால் கெஃப்பைன் என்ற வேதி பொருள் உடலில் சேருகிறது. கெஃப்பைன் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் நிச்சயம் பாதிக்கப்படும்.

9. வலி நிவாரணி :

உடம்பில் வலிகளை குறைக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு வலி நிவாரணி ( Painkiller ) எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை நிச்சயம் பாதிக்கும். வலி நிவாரணி பல்வேறு வேதி பொருட்களை கொண்டுள்ளது, எனவே இவற்றின் பயன்பாட்டை குறைப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது.

10. புரதங்கள் :
புரதங்கள் அதிகமுள்ள இறைச்சியை தவிர்ப்பது சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருந்து காக்கிறது. அதிக அளவு புரதங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.

Leave a Reply