​வேண்டாமே மூடநம்பிக்கை

​வேண்டாமே மூடநம்பிக்கை!

மூடநம்பிக்கை காரணமாக சிலர் எட்டு, ஒன்பது மாதங்களிலேயே ஜோதிடம் பார்த்து, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுகொள்கிறார்கள். 37 வாரங்களுக்குப் பிறகு சிசேரியன் செய்துகொண்டால், குழந்தைக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை. உரிய மருத்துவக் காரணங்கள் இன்றி சொந்த விருப்பத்துக்காக, குறை மாதங்களில் சிசேரியன் செய்து, குழந்தையைப் பெற்றெடுப்பது அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் தீங்கு. மூடநம்பிக்கையை காரணமாக வைத்து குழந்தையின் உயிரோடு விளையாடக் கூடாது. 
குறைப்பிரசவம் தவிர்க்க எளிய வழிகள் 
ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் அவசியம் தேவை. எப்போதும் மன அழுத்தத்தில் சுழலும் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்து, பி.எம்.ஐ அளவை நார்மலில் வைத்திருக்க வேண்டும்.
சிகரெட், போதைப் பொருட்கள், மது தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக் குறைவும், குறைப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
குழந்தையைத் தள்ளிப்போடாதீர்கள்
குழந்தைப்பேறைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அதற்காகக் குழந்தைபேற்றைத் தள்ளிப்போட வேண்டாம். வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு, கருமுட்டையின் தரம் குறைவதால், கரு உருவாவதிலும் பிரச்னை ஏற்படலாம்.
#doctorvikatan #டாக்டர்விகடன்

Leave a Reply